மும்பையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 21 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். முதலில் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இந்தியாவில் அங்காங்கே குண்டுகள் வெடிப்பது ஏதோ அன்றாடம் பால், ரேசன் வாங்குவது போல் வாடிக்கை ஆகிவிட்டது. குண்டு வெடித்ததும் உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை கண்டனம் தெரிவிப்பதும், உள்துறை அமைச்சர் குண்டு வெடித்த இடங்களை பார்வை இட்டு இன்னும் ஒரு வாரத்தில் குண்டு வைத்தவர்களை கண்டு பிடிப்போம் என்பதும் பார்த்து பார்த்து சலித்து விட்டது. இதற்கு நிரந்தர தீர்வே இல்லையா??
உளவுத்துறை!! உளவுத்துறை என்ற ஒன்றை நாம் வைத்திருப்பது மற்ற நாடுகள் எல்லாம் வைத்திருப்பதால் நாமும் கௌரவத்திற்காக வைத்திருகிறோமா?? இதே உளவுத்துறை தமிழர்களுக்கு எதிராக சிங்களன் போர் தொடுக்க வரிந்து கட்டிக்கொண்டு பொய் அவனுக்கு ராடார் கொடுத்து உளவு பார்த்து சொல்ல மட்டும் தான் பயன்படுத்தபடுகிறதா!! இதற்காக நமது வரிப்பணத்தின் பாதி பணம் இதற்கே செலவிடப்படுகிறது. உளவுத்துறை ஒவ்வொரு குண்டு வெடிப்பின் போதும் தூங்கிக்கொண்டு இருப்பதே வழக்கமாகி விட்டது .
ஒரு வாரத்திற்கு முன்தான் நமது "சிந்தனை சிற்பி" "வாழும் அறிவு ஜீவி " ப. சிதம்பரம் இந்தியாவில் சில நாட்களாக குண்டுகளே வெடிக்காமல் இருக்கிறது என்று தன கரி நாக்கை வைத்து சொன்னாலும் சொன்னார். இதோ 21 அப்பாவி மக்களின் உயிரை வாரி கொடுத்து விட்டு ஒன்றும் செய்ய இயலாமல் நிற்கிறோம்.
ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்போமா என்று வாழ்வதுதான் இந்தியனின் விதியோ?? அடுத்த குண்டு வெடிப்பு நடக்கும் வரை தான் இந்த நிகழ்வு நம் நினைவில் இருக்குமோ???
நம்ம மாநிலத்தை விட்டு பக்கத்துக்கு மாநிலத்துக்கு போனாகூட அங்க நம்ம ஆளுகளை பார்த்துட்டா நமக்கு வர சந்தோசத்துக்கு அளவே இருக்காது. அது மாதரி குசலம் விசாரிக்க போய் நான் மாட்டிகிட்ட ஒரு சம்பவத்தை இங்கே உங்ககிட்ட பகிர்ந்துக்கறேன். பிற்காலத்தில் யாராவது அமேரிக்கா வந்தால் அவங்களுக்கும் உபயோகமா இருக்கும்.
நான் அமெரிக்க வந்து ஒரு வாரமே ஆன காலம் அது. உள்ளுரில் நாம புலியா இருந்தாலும் வெளியூரோ, வெளி நாடோ போனால் எது எது எங்கே இருக்கிறது எங்க போனால் என்ன கிடைக்கும் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள நாள் ஆகும். அப்படி என் கூட வேலை பார்த்த மக்களை கேட்டு பக்கதுல இருக்கிற ஒரு பலசரக்கு கடை (Grocery store) ஒன்னை கண்டுபிடிச்சி ஒரு சாயந்திர நேரமா போய் சேர்ந்தேன். கூட்டம்னு பெருசா ஒன்னும் இல்ல. அந்த வாரத்துக்கு தேவையான பால் கொஞ்சம் ரொட்டியும் வாங்கிகிட்டு இருக்கும் போது "ஹலோ " அப்படின்னு ஒரு அபலக்குரல்.
திரும்பி பார்த்தால் அஞ்சரை அடி உயரத்துல பார்த்தாலே பளிச்சுனு தெரிஞ்சது அண்ணன் மென்பொருள் எழுதுற ஆளுன்னு. நானும் ஹெல்லொன்னு சொல்லிவச்சேன். அவர் பெயர "பிரகாஷ் " அப்படின்னும் 'சநோசெல'(sanjose) வேலை பாக்கறேன்னும் சொன்னாரு. அமெரிக்கா வாரத்துக்கு முன்னாடி சென்னைலதான் வேலை பார்த்ததாகவும் சொன்னாரு. நானும் என்னை பத்தி சுருக்கமா சொன்னேன். பேசி முடிஞ்சதும், உங்க கூட நான் நட்பு வச்சுக்க ஆசைபடறேன் உங்க செல் போன் நம்பரை கொடுங்களேன் அப்படின்னு கேட்டாரு அண்ணாச்சி. இந்த ஊர்ல இப்படி ஒரு நல்லவர்னு நெனச்சு நம்பரை கொடுத்து வங்கிகிட்டோம். (இங்கதான் சனி அன்னிக்கு ஆரம்பிக்கும்னு எனக்கு தெரியல).
ஒரு வாரம் கழிச்சு போன் பண்ணாரு அண்ணாச்சி, இங்க பக்கதுல ஒரு கால் பந்து போட்டி நடக்குது வரிங்களா நானே என் கார்ல வந்து கூட்டிட்டு போறேன்னு சொன்னாரு. ஆனாலும் எனக்கு இருந்த வேலை பளுவில் என்னால போக முடியல. அதே மாதிரி ரெண்டு மூணு தடவை போன் பண்ணி கூப்பிட்டாரு. என்னால போக முடியல. இப்படியே ஒரு மூணு மாசம் ஓடிப்போச்சி. திடீர்ன்னு ஒரு நாள் போன் பண்ணி நான் இருக்கிற இடத்துக்கு பக்கதுல இருக்கிற காபி கடைக்கு வாங்க சந்திப்போம், இந்த பக்கமா வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துட்டு போகலாம்னு கூப்டேன்னு பில்ட் அப் வேற கொடுத்தாரு அண்ணாச்சி.
நானும் , அமெரிக்க ஏழைகளின் ஒரே வாகனமான நம்ம சைக்கிளை எடுத்துகிட்டு அவர் சொன்ன எடத்துக்கு போய் சேர்ந்தேன். சொன்ன மாதிரி நமக்கு முன்னாடியே அண்ணாச்சி வந்து காத்துகிட்டு இருந்தாரு. வழக்கமான குசல விசாரிப்புகள் முடிஞ்சா உடனே தன் பொட்டிய தெறந்து ஒரு லேப்- டாப் எடுத்து ஏதோ ஒன்னை தட்டினாரு. ஒரு வெப் பக்கத்தை திறந்து, அவரு ஒரு ஆன்லைன் வர்த்தகம் பண்றதாகவும் நானும் 200 டாலர் கட்டி சேர்ந்துக்க சொல்லியும் சொன்னாரு. "ஏதோ முருகன் படம் இல்ல வினயாகர் படம் டாலர்னா பரவால்ல எத்தனை வேணும்னாலும் வாங்கி கொடுத்துடலாம்.ஆனா அவரு கேட்டது அமெரிக்க டாலர்".
அப்புறம் இதுமட்டுமில்லாம நான் அஞ்சு பேரை இந்த கருமத்துல சேர்த்து வேற விடணுமாம். சரி அத்தோட விடுவான்னு பார்த்தா அஞ்சு பேருக்கு போனை போட்டு எனக்கு மூளை சலவை செய்ய வச்சான். அதுல ஒருத்தன் சொன்னான் பாருங்க. அஞ்சு வருஷம் இதுல இருந்த கிட்டத்தட்ட "பில் கேட்ஸ்" அளவுக்கு நீங்க பணக்காரனா ஆயுடுவீங்கனு (பில் கேட்ஸ் மன்னிக்க). நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன். சரி நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு (வேற எப்படி தப்பிகறது) நான் குடிச்ச காபிக்கு பணத்தை கொடுத்து விட்டு அந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு வந்தவன்தான்.
மறுபடியும் இரண்டு மூன்று முறை போன் செய்தான் எடுப்பேனா ??? எலி ஏன் நிர்வாணமாய் ஓடுகிறது என்று அப்போதுதான் புரிந்துகொண்டேன்.. !!!
தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் பாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற தகுதி உள்ள சாதனையாளர். நான்கு தலைமுறை நடிகர்களுக்கு பாடிய பெருமை பெற்றவர். இன்றும் அதே இனிமையான குரலுடன் நம்முடன் உலா வரும் "பாடும் நிலா" பாலு தான் அந்த சாதனையாளர். நான் சொன்ன அனைத்துமே அவர் பெற்ற புகழில் ஒரு துளிதான்.
அமரர் MGR -கும் , நடிப்பு மேதை சிவாஜி கணேசனுக்கும் தன் குரலில் மாற்றங்களை காட்டி பாடி பெரும் புகழோடு இருந்த T . M .சௌந்தரராஜன் அவர்கள் காலத்தில் திரை உலகில் நுழைந்தார். இவர் இனிமையான குரலை கண்டு அப்போதைய இசை மாமேதைகளான MSV மற்றும் கே.வி. மகாதேவன் ஆகியோர் தொடர்ந்து கொடுத்த வாய்ப்புகளால் MGR -கும் , சிவாஜிக்கும் இவர் குரலை பயன்படுத்தினார்கள்.
இதுவரை நான்கு வெவ்வேறு மொழிகளில் பாடியமைக்காக ஆறு முறை தேசிய விருதும், இந்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" மற்றும் " பத்ம பூஷன்" விருதையும், தமிழ்நாடு, ஆந்த்ரா, கர்நாடகா மற்றும் கேரளா அரசுகளின் மாநில விருதுகளை எண்ணிலடங்கா முறை வாங்கி இருக்கிறார். பிலிம் பேர் விருதுகளும் நெறயவே வாங்கி குவித்துள்ளார் பாலு.
இவர் பாடகராக மட்டுமில்லாமல் நடிகராக பல படங்களிலும், சில படங்களுக்கு இசை அமைப்பாளராகவும், சில படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார் . இன்றும் தெலுங்கு படங்களில் கமலுக்கு இவர்தான் பின்னணி குரல் கொடுத்து வருகிறார்.
இவ்வளவு சாதனைகளுக்கு சொந்தக்காரரான பாலுவின் ஒரே மகன் SPB . சரண் இதே துறையில் பரிமளிக்க முடியாமல் இன்னமும் தத்தளிக்கிறார் என்றால் வியப்புதான்.
முதலில் தன் தந்தையின் தொழிலான பின்னணி பாடகராக முயற்சி செய்தார். அதில் சில பாடல்கள் பிரபலமானாலும் , அவரின் குரல் பாலு அவர்களின் குரலை போலவே இருந்ததனால் வாய்ப்புகள் அரிதாகவே போனது. இளையராஜா அவர்களால் "தேவதை" படத்தில் அறிமுகப்படுத்தபட்டவர் ஆனாலும் இவரால் பெரிய அளவில் பின்னணி பாடகராக சோபிக்க முடியவில்லை.
இதன் பின் பாடுவதை விடுத்து நடிப்பில் இறங்கினார். "உன்னை சரணடைந்தேன்" படத்தின் மூலம் நடிகராக வந்தார். இதற்க்கு முன் ஒரு ஒரு கன்னட படத்தில் நடிகராக அறிமுகமானார் சரண். நடிப்பிலும் ஒன்றும் சொல்லி கொள்கிறமாதிரி இவரால் பரிமளிக்க முடியவில்லை. இவர் கடைசியாக நடித்த படம் "வ. குவாட்டர் கட்டிங் " .
நடிப்பில் இருக்கும்போதே தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் சரண். உன்னை சரணடைந்தேன் மற்றும் மழை படங்கள் பெரிய அளவில் இவருக்கு பணத்தை கொடுக்காவிட்டாலும், அடுத்து வெங்கட் பிரபு இயக்கிய சென்னை -28 நல்ல வசூலையும் நல்ல பெயரையும் தந்தது. சமீபத்தில் இவரது படமான "ஆரண்ய காண்டம்" இவருக்கு ஓரளவுக்கு பணத்தையும் பேரையும் தந்தது. ஆனாலும் இன்னும் இவரால் இந்த துறையில் நிலையாக ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை. திறமைகள் இருந்தும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லையோ என தோன்றுகிறது.
உலகின் சிறந்த பெண் ஓட்டுனர்களின் புகைப்படங்களை தொகுத்து உங்கள் முன் வைத்திருக்கிறேன். எவ்வளவு சிறந்த ஓட்டுனர்கள் பாருங்கள் (மாதர் சங்கங்கள் மன்னிக்க ). ஒன்றுமட்டும் நிச்சயம்எதிரில் வண்டி ஓட்டும் நம்ம மக்களே கொஞ்சம் ஜாக்கிரதை !!!
இது ஒரு நகைச்சுவை பதிவு யார மனதையும் புண்படுத்த அல்ல.
ஹாலிவுட் சினிமாவில் தற்போது இயக்குனராக முத்திரை பதித்துகொண்டிருக்கும் இந்தியர் மனோஜ் நைட் சியாமளன், பாண்டிச்சேரியில் பிறந்து அமெரிக்காவின் "பெனிசுலவானியா" மாநிலத்தில் "பிலடெல்பியா" நகரத்தில் வளர்ந்தவர்.
இவர் படங்களில், கிளைமாக்சில் வரும் திடீர் திருப்பம் படம் பார்ப்பவர்களை திகைக்க வைக்கும். அதற்காகவே இவர் படங்கள் ஹாலிவுட் சினிமாவில் பிரபலம்.
ஷ்யாமளனின் அப்பா அம்மா இருவரும் அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்கள். ஷ்யாமளன் சிறுவயதிலே அமெரிக்காவில் வளர்ந்தவர், இவர் தனது சினிமா ஆசைக்கு காரணம் "ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்" என்கிற ஹாலிவுட் இயக்குனர் என்கிறார். "பாவனா" என்ற இந்திய பெண்ணை 1992 ம் ஆண்டு திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தை இவர். அதுமட்டுமின்றி தனது பத்து வயதிலேயே குறும் படங்களை தன் கையடக்க காமெரா மூலமாக படம் பிடித்துள்ளார் ஷ்யாமளன்.
இவர் முதன் முதலில் இயக்கிய படம் 1992 -இல் வெளியிட்ட "ப்ரயிங் வித் அங்கேர்" (Praying with Anger), இந்த கதை இவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வது போல் சித்தரிக்கப்பட்ட கதை.
இவரது "சிக்ஸ்த் சென்ஸ்" படம் உலகமெங்கும் இவரை பிரபலப்படுத்தியது. ஒரு சிறுவனின் உளவியல் மாற்றங்களை சரி செய்ய வந்த மருத்துவராக "ப்ருக்ஸ் வில்லிஸ்" நடித்திருந்தார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி பார்த்த எல்லோரையும் இருக்கையின் நுனியில் உட்கார வைத்தது என்றால் அது மிகை இல்லை.
"சிக்ஸ்த் சென்ஸ்" படத்தின் முன்னோட்ட காணொளியை இங்கு இணைத்துள்ளேன் .
சிக்ஸ்த் சென்ஸ் படத்தின் ஆர்பாட்டமில்லாத க்ளைமாக்ஸ் காட்சி
இந்த படத்திற்கு பிறகு, இவர் கதை எழுதி இயக்கிய படங்கள் 'அன்பிரேக்பல்" "தி வில் ஏஜ்" " தி லேடி இன் தி வாட்டர்" போன்ற படங்கள் . இதில் "தி வில் ஏஜ்" படம் மட்டும் சுமாராக ஓடிய படம்.
"ராபர்ட் ம்சில்ஹின்னே" என்ற எழுத்தாளரை இவர் காப்பி அடித்து திரைக்கதை அமைகிறார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவும் இவரை கவுரபடுத்தி பத்மஸ்ரீ விருது வழங்கி உள்ளது. இவர் தனக்கென ஒரு வலை தளத்தை வைத்து இருக்கிறார். இன்னும் பல சாதனைகள் புரிய இவரை வாழ்த்துவோமே !!!!