Wednesday, April 13, 2011

முத்தம் போதாதே

முத்தம் போதாதே


நீயும் குருதான்  
என் கண்ணே! வித்தையை
கற்று கொடுப்பவர் எல்லாம்
குரு என்றால் நீயும் என்
குருதான் முத்தமிடும் கலையை
கற்று கொடுத்ததால்!!!
=====================================================

Thanks to goole images for the picture

காத்திருப்பு

பூங்கா மரத்தடியில்
இரண்டு மணி நேரமாய்
அமர்ந்திருக்கும் என்னை
முறைக்கும் வாட்ச்மேனுக்கு 
என்ன தெரியும் நீ தரும்  
ஒற்றை முத்ததிற்காக   
நான் தவமிருப்பது!!!!
========================================================

எப்படி சொல்வது!!

என் காய்ச்சலுக்கு காரணம்
கேட்கும் மருத்துவரிடம்
எப்படி சொல்வேன் நேற்று
இரவு நீ கொடுத்த
முத்தம் தான் என்று.
======================================================


காதலில் தோற்றவன்

காதலில் தோற்ற என்னிடம்
எஞ்சி இருப்பவை உன்
நினைவுகளும் நீ கொடுத்த 
முத்தங்களும்  மட்டுமே
======================================================

ஏன் இப்படி

நீ வாய் துடைத்து
கசக்கி எரியும் நாப்கின்கள்
கூட என்னை எள்ளி
நகையாடுகின்றனவே!!!
=======================================================

தோற்க தயார்

வேறந்த சண்டையிலும்
தோற்க தயாரில்லை நான்
 உன்னுடன் நடக்கும்
முத்த சண்டையை தவிர
========================================================
நான் ரசித்த காணொளி

இந்த காணோளியை சுவாரசியமாக ரசித்து பார்த்தேன். ஆண்களில் அறியாமையிலும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் போலும்.


அன்புடன்
அசோக் குமார்

Monday, April 11, 2011

முத்தமிடலாமா

முத்தமிடலாமா

 
மின்சார தேவை

மின்சார தேவைக்காக
அயல் நாடுகளை கையேந்தும்
இந்திய அரசாங்கத்திற்கு
தெரியவில்லை உன் ஒற்றை
முத்தத்தில் 1000 மெகா வாட்
மின்சாரம் எடுக்கலாம் என்று.

====================================================

 
சண்டை போடலாமா?

நாம் சண்டையிட்டு
பிரிந்த பின்பு  சேரும் நாட்களில்
முத்தம் தந்து என்னை 
சமதானபடுத்துகிறாய் உன்
முத்ததிர்க்காகவாவது நாம்
அடிக்கடி சண்டையிட  வேண்டும்.
=====================================================


கூடிய பின்பு..
எனக்கு மட்டும் நீ
வித்தியாசமானவளாக தெரிகிறாய்
எல்லோரும் முத்தம் கொடுத்தபின்
கூடுவார்கள் ஆனால்- நீ
முத்தமிட்டு நம் கூடுதலை முடிகிறாய்.

=====================================================

 
விலைமகளின் முத்தம்

விலைமகளின் முத்தத்தை
சுவைப்பவர்களுக்கு
தெரிவதில்லை அவளின்
ரணமாகிபோன மனது.

=====================================================
முத்த வரலாறு

பெண்ணே! அங்காங்கே
உன் இதழ் தடங்களை
பதித்துவிட்டு போ!
பிற்காலத்தில் நான்
முத்த வரலாறு
எழுத பயன்படும்
=====================================================
நான் ரசித்த காணொளி
பேஸ் புக்கில் சில நாட்களுக்கு முன் இந்த காணோளியை காணும் வாய்ப்பு கிடைத்தது நீங்களும் பார்த்து சிரிக்கலாமே!!!



அன்புடன்
அசோக் குமார்

Wednesday, March 30, 2011

படித்ததும் பிடித்ததும்

படித்ததும் பிடித்ததும் 

கிரிக்கெட்அரை இறுதி :  இந்தியா வெற்றி


அரை இறுதி போட்டியில் பாகிஸ்தானை வெற்றி பெற்றதன் மூலம்  இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதி போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து மும்பையில் விளையாட உள்ளது. மறுபடியும் சச்சின் 85 ரன்கள் அடித்து வயதுக்கும் ஆட்டத்திற்கும் சம்மந்தம் இல்லை என நிரூபித்துள்ளார். பாகிஸ்தான் வீர்கள் நன்றாக போராடினார்கள். அப்ரிடி மிக நன்றாக பேசினார் இறுதியில். இன்சமாம் போல இல்லாமல் மிக நன்றாக பேசினார். ஆட்டத்தில் வெல்லாவிட்டாலும் நம் மனங்களை வென்றுவிட்டார்.
=========================================================
ஆஸ்திரேலிய அணி காப்டன் மாற்றம்

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி காப்டன் ரிக்கி பாண்டிங் மாற்றப்பட்டு கிளார்க் காப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். எல்லாம் இந்தியாவிடம் தோற்ற நேரம் போலும். இரண்டு முறை  அணிக்காக கோப்பை ஜெயித்தவர்.

"தீதும் நன்றும் பிறர் தர வரா"  


=====================================================================
சாட்டையடி கொடுத்த பொது ஜனம்

தினமலர் இன்றைய காணொளி காணும்போது மதுரையை சேர்ந்த ஒரு நபர் 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' போர்டு வைத்துள்ளார்.

"நாமும் பின்பற்றலாமே, நல்ல மனிதர்- வாழ்க"

============================================================
தேன் கிண்ணம்
இந்த பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கும், அடுத்த வீடு பெண் படத்தில் இருந்து "கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே". பி. பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் தேமதுர குரலில். தங்கவேலு நடிப்பில் பிரமாதபடுத்தி இருப்பார். அஞ்சலி தேவியின் சொந்த தயாரிப்பில் வெளி வந்த படம்.

 

==========================================================

அன்புடன் அசோக் குமார்

Monday, March 28, 2011

மழை கவிதைகள்-I

மழை கவிதைகள்-I

சூரிய காதலன்


ஏ மழையே! நான் வருவேன்
என தெரிந்து பூக்களுக்குள்  
ஒளிந்து இருந்தாய் பூக்களை
பற்றி தான் எனக்கு தெரியுமே.
எனை பார்த்து பூக்கள்
மலர்ந்து உன்னை
காட்டி கொடுத்துவிட்டனவே
=========================================================

ஆலங்கட்டி மழை



உதிர்ந்த
வெண்முத்துகளை 
எடுக்கத்தான்
முடிந்தது
கோர்த்து
வைக்க நான்
என் செய்வேன்

===================================================
மழை வேண்டி
 
யாகம் வளர்கிறார்கள்
கழுதைக்கும் கழுதைக்கும்
கல்யாணம் என்கின்றனர்
பெண்கள் எல்லாம் சேர்ந்து
ஊர் எல்லையில் கூடி
அழுகிறார்கள்  மரம் வளர்ப்பதை
மட்டும் தவிர்த்து

==========================================================
நனைவது பிடிக்கும்


சிலருக்கு மழையில்
நனைவது
பிடித்தமான ஒன்றுதான்
குடையை மறந்த
நாட்களில் மட்டும்

=======================================================
நல்லவர் ஒருவர் உளரேல்



இப்போதெல்லம்
நல்லவர்களை
அடையாளம் காட்ட
மட்டும்தான்
வருகிறாய்
போலும்

=========================================================
அன்புடன்
அசோக் குமார்

Saturday, March 26, 2011

பொம்பளைன்னா சும்மாவா

 பொதுவாகவே "ஆண்கள் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு பெண்கள் கிரிக்கெட்டிற்கு இருப்பதில்லை". நமக்கு சுவாரசியம் எல்லாமே டெண்டுல்கரும் சேவாக்கும் செஞ்சுரி அடிச்சா போதும், மத்த எதை பத்தியும் கவலை இல்லை. அதிலும் குறிப்பா டெண்டுல்கர் அவுட் ஆனா உடனே மொத்த கூட்டமும் காணாம போய்டும்.

ஆண்கள் கிரிக்கெட் அளவுக்கு இல்லைனாலும், நாங்களும் சளைத்தவர்கள் இல்லன்னு விளையாடுற ஒரு பெண் புலிதான் "மிதாலி ராஜ்".



மிதாலி பிறந்தது 1982 டிசம்பர் மாதம்,  ஜெய்பூர்  மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில். அப்பா- துரைராஜ், வானூர்தி துறையில் பதவி வகிக்கிறார்,   அம்மா-லீலாராஜ்.

இயற்கையாகவே வலது கை துடுப்பாட்டக்காரர் மற்றும் வலது கை சுழற்பந்து வீச்சாளர்.     முதல் டெஸ்ட் ஆட்டம் 2002-ம் வருடம் இங்கிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார்.


டெஸ்ட் மேட்சில் முதன் முதலில் இரட்டை சதம் (214) அடித்த ஒரே பெண் மட்டைவீச்சாளர் மிதாலி மட்டுமே. இதுவரை இந்த சாதனையை யாரும் செய்யவில்லை. மொத்தம் எட்டு டெஸ்ட் ஆட்டங்களில் 572 ஓட்டங்கள் எடுத்துள்ளார், இதில் ஒரு சதமும் மூன்று அரை  சதமும் அடங்கும். இவருடைய சராசரி 52 ரன். பெண் டெண்டுலகர்னு சொன்னால் அது மிகை   இல்லை.


ஒருநாள் போட்டிகளில் 150 ஆட்டங்களில் விளையாடி 3500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 3000 ரன்களை அடித்த முதல் பெண் ஆட்டகாரரும் இவர்தான். ஒருநாள் போட்டிகளில் இவர் சராசரி 49 ரன்கள். ஒருநாள் போட்டிகளில் இவருடைய அதிகபட்ச ரன் 114* .  ஒற்றை ஆளாக நின்று பல போட்டிகளில் வெற்றி தேடி தந்துள்ளார் மிதாலி.

"அழகிலும் இந்த தேவதை யாருக்கும் குறைவில்லை".



சுவாரசியமான இன்னொரு விஷயம் சின்னஞ்சிறு வயதிலே முறையாக பரதநாட்டியம் பயின்றவர்.


இவர் இந்திய அணிக்கு தலைமை பொறுப்பும் ஏற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். "இவர் திறமையை மெச்சி இந்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான அர்ஜுனா  விருதை வழங்கி கௌரவித்துள்ளது.  உலக கிரிக்கெட் கவுன்சில் தர வரிசையில் (ICC ranking) 2010-ம் வருடம் பிப்ரவரி மாதம் வரை முதலிடம் பிடித்தார் மிதாலி.

இவர் உலக கோப்பைக்கு செல்லும் முன் கொடுத்த உரையாடலின் காணொளி.

 

"இன்றைய நாளில் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் இவரை போற்றுவோம். பெண்கள் கிரிக்கெட்டையும் ரசிப்போம்".

அன்புடன்
அசோக் குமார்

Friday, March 25, 2011

தலைவன்- காமராஜர்

" மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்.
வாரி வாரி வழங்கும்போது வள்ளல் ஆகலாம்.
யாருக்காக அழுதபோதும் தலைவன் ஆகலாம்"
கண்ணதாசனின் அனுபவ வரிகள். 

மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டுமே தவிர, அவனே விமர்சனத்துக்கு அப்பற்பட்டவனாகவும் இருத்தல் நல்லது. " கிங் மேகர்" என்று அழைக்கப்பட்ட காமராஜர் தமிழ்நாட்டின் பெரும் சொத்து. எதிர்  கட்சி தலைவர்களும் மதித்த ஒரே தலைவர்  காமராஜர் என்றால் அது மிகை இல்லை.  நம் நல்ல நேரம் இவரை போல உதாரணமாக காட்டவாவது நமக்கு நல்ல தலைவன் கிடைத்தான் என பெருமை கொள்ளலாம்.



 சமீபத்தில் நெல்லை கண்ணன் அவர்கள் காமராஜரை பற்றி பேசிய காணோளியை you-Tube-இல் பார்த்தேன். நல்ல தலைவர்களை நாம் மதிப்பதில்லை என்பது நூறு சதம் உறுதி.








 காமராஜர் பற்றி காங்கிரஸ் கட்சி காரர்களுக்கே இவ்வளவு விஷயம் தெரியுமான்னு தெரியல.  ஆனால் காமராஜர் ஆட்சி அமைப்போம்னு நல்ல கூவறாங்க.....!!
"நல்ல தலைவர்கள் பலர் இருகிறார்கள், அவர்களை இனம் காணுவதில்தான் நமக்கு பிரச்சினை."

இவரும் தலைவர்???????????????????


என்ன கொடுமை சார் இது??

வேறு  என்ன சொல்ல!!!!!

அன்புடன்
அசோக் குமார்


Saturday, March 19, 2011

நீ! நான்! மழை!

Thanks to google for the image

ஏன் பெண்ணே! எனக்கு மட்டும்
      இந்த ஒரவஞ்சனை- நான்
தொடாத இடத்தையும் மழை
      தொட அனுமதிக்கிறாயே- என்றேன்
அவள் சொன்னாள் மழைக்கு
        உன்னைப்போல்  சில்மிஷம்
செய்ய தெரியாதே என்றாள்!!!


அன்புடன்
அசோக் குமார்