தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் புதிய பாதையை நோக்கி புறப்பட்ட வேளையில் , தோல்வியுற்ற கட்சிகள் தீர்ப்பை ஏற்பதாக சொல்லி கொள்கின்றனர் . அளவுக்கு அதிகமான ஊழல் குற்றச்சாட்டுகளும், ஒரு துறையைக் கூட விட்டு வைக்காமல், அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதும் தான், தி.மு.க.,வை படுதோல்வி அடையச் செய்து, ஆட்சியை பறிகொடுக்க வைத்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு, தி.மு.க., அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டு, இந்த துறையை விட்டு வைத்தனர் என்று கூற முடியாத அளவிற்கு, அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் மூக்கை நுழைத்து, ஏகபோக ஆதிக்கம் செலுத்தியதன் விளைவால், ஆட்சியைப் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.அரசுத் துறை, சினிமாத் துறை, கேபிள் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதல்வர் குடும்பத்தினர், ஐந்து ஆண்டுகளாக அக்டோபுஸ் போல கபளீகரம் செய்து வந்தனர். இதனால், ஒவ்வொரு துறையிலும் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும், அரசியலிலும் குடும்ப ஆதிக்கம் மேலோங்கியது. இவர்களின் அத்துமீறல்களால், ஒவ்வொரு வகையிலும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த கோபத்தை, தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஈழ தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாக தமிழ் நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியையே புறகணிக்க. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி சொல்வது தமாசாக உள்ளது. "நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுக்கு மக்களின் ஆதரவு சிறிதளவு கூட கிடைக்கவில்லை" என்கிறார் மனுஷன் . எனக்கு ரெண்டு கண் போனாலும் பரவாயில்ல எதிராளிக்கு ஒரு கண்ணாவது போகணும் என்பது மாதிரி இருக்குது. எப்போதான் திருந்த போராங்களோ!!
புதுசா பதவிக்கு வர அம்மா என்ன பண்ண போராங்களோ !!!
No comments:
Post a Comment