என் உடன் பணிப்புரியும் நண்பர் ஒரு நாள் உனக்கு ஒரு ஆச்சர்யமான பொருளை காட்டபோகிறேன் என்று சொன்னார். பிறகு தன் மேசைக்கு கீழ் இருந்து சின்ன சைஸ் போட்டியை திறந்து காட்டினார். கொஞ்சம் ஆச்சயர்ப்பட்டுதான் போனேன், முதன் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வெளியீடான மடிகணினியை காட்டினார். இந்த கணினி 1993 -ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒன்று.
எடை ரொம்ப கம்மிதான் 12 கிலோ , தூக்கிட்டு போறதுக்கே ரெண்டு ஆள் வேணும். கிட்டத்தட்ட 20 வருசமாக இதை பத்திரமாக வைத்துக்கொண்டு இருக்கிறார் என் நண்பர், சுவாரசியமான விஷயம்தான்.
வாணிஜெயராம், தனியே தெரியும் குரலுக்கு சொந்தக்காரர். சுசீலா, ஜானகி மற்றும் LR . ஈஸ்வரி இவர்கள் காலத்தில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு பின்னணி பாடகியாக நிலை நிறுத்திக்கொண்டவர். அவரின் பாடல்களை சிறு பகுதிகளாக தொகுத்து இருக்கிறேன் .
நேற்றைய தினமலர் நாளிதழில் வெளியான இந்த செய்தியை பார்த்துதான் இப்படியான கேள்வியை கேட்கவேண்டி இருக்கிறது. விவசாயத்தை நம்பி இருக்கிற நாடுகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இந்தியாவுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட இந்தியாவில்தான் தன் சொந்த நிலத்தை பண்படுத்த எருதுகள் இல்லாமல் தன் மகன்களை வைத்து எருதுகளாக பூட்டி நிலத்தை உழுதிருக்கிறார்.
இந்தியாவின் விவசாயத்துறை அமைச்சரின் சொந்த மாநிலமான "மகாராஷ்டிராவில்தான் இந்த கொடுமை. அவருக்கு கிரிக்கெட்டில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதிலேயே நேரம் போய்விடுகிறது போலும்.
எட்டு ஏக்கரில் தனக்கே சொந்தமான நிலம் இருந்தும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த மனிதர். இந்த நிலை மகாராஷ்டிராவில் மட்டும் இல்லை எல்லா மாநிலங்களிலும் இதை விட மோசமான நிலை இருக்கிறது. கௌரவத்திற்காக விவசாயம் செய்கின்ற சூழல் தான் இந்தியா முழுக்கவே இருக்கிறது.
பருவ மழைகள் பொய்த்து போவது ஒரு பிரச்னை என்றால், இது போன்று விவசாயத்திற்கான பொருட்கள் கிடைக்காமல் விவசாயமே மொத்தமாக நசிந்து போய்க்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயம், கேட்பாரற்று கிடப்பது அவலமே. இந்த நிலையில் இந்தியா வல்லரசாவது 2020 -லா இல்லை 2030-லா என பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருப்பவர்களை பார்த்தால் இன்னும் இவர்களுக்கு பயிற்சி போதவில்லையோ என தோன்றுகிறது.
திமுக அமைச்சர்கள் முதல் முன்னாள் சட்ட்ட மன்ற உறுப்பினர்கள் வரை தலைமறைவு என்ற செய்தி கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. தாங்கள் பதவியில் இருந்த காலம் வரை மக்களை பற்றி சிந்திக்காமல் தன் சட்டை பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். அதுமட்டுமின்றி ஏதோ குறுநில மன்னர்கள் போல் தங்கள் பங்கு நிலங்களையும் மிரட்டி அபகரித்து உள்ளனர். ஆனானப்பட்ட வீரபாண்டியரே தலைமறைவாகி இருக்கிறார் என்றால் மற்றவர்கள் நிலைமை கொஞ்சம் கஷ்டம் தான்.
=============================================
கல்வி விஷயத்தில் ஏன் இப்படி குழப்புகின்றனர் என்று புரியவில்லை. தன் சொந்த விருப்பு வெறுப்புகளை கல்வி விஷயத்தில் புகுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் புத்தகம் கிடைக்காமல் மாணவர்கள் மேசையை தேய்க்கும் நிலை இருப்பது அவலம். உயர்நீதி மன்றத்தால் கண்டிக்கபட்டும் மாறவில்லை என்றால் இந்த ஆட்சிக்கு இது அழகல்ல. பாடத்திட்டங்கள் சரி இல்லை எனில் அடுத்த வருடம் புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தலாம். முதல்வரின் வறட்டு பிடிவாதத்திற்க்காக பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவது நல்லதல்ல.
============================================
"குண்டலி யாகம்" நடத்துகிறேன் பேர்வழி என சொந்த காசில் சூனியம் வைத்துகொண்டுள்ளார் "கதவை திற காற்று வரட்டும் புகழ் நித்தி" . புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக காற்றில் மிதக்க வைக்கிறேன் என்று கூவி விட்டு தன் பக்தர்கள் அனைவரையும் குழந்தைகள் பள்ளிகூடங்களில் தவளை ரேசில் கலந்துகொண்டவர்கள் போல்் குதித்தது ரொம்ப நாட்களுக்கு பிறகு வடிவேல் நகைச்சுவை கணக்காக இருந்துச்சு. பாவம் இதுல ரஞ்சியை வேற குதிக்க சொன்ன அண்ணாத்த, பறக்க முடியாமல் கீழே விழுந்த ரஞ்சிக்கே சிரிப்பு தாங்க முடியல. இதுல முன் எச்சரிக்கையா ஹெல்மெட் வேற போட்டுக்கிட்டு சில பேரு. எப்பா முடியலட சாமி !!
==========================================
"தெய்வ திருமகள்" படம் பார்ப்பவர்களை அழ வைக்கிறது, குறிப்பாக விக்ரம் மற்றும் நிலாவாக நடித்திருக்கும் குட்டிப்பெண் சாரா நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்். என்னதான் I am sam படத்தின் தழுவல் என்றாலும் கதையை நம்ம சுழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்தில் இருக்கிறது இயக்குனர் விஜயின் வெற்றி. விக்ரம் இந்த படத்திற்கு நெறயவே மெனக்கெட்டு இருக்கிறார். வாழ்த்துக்கள் !!!!
==========================================
இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் சச்சின் தனது நூறாவது சதத்தை எட்டுவாரா என எல்லோரும் ஆவலோடு இருக்கிறார்கள். லோர்ட்ஸ் மைதானம் கிரிகெட்டின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. அங்கே இந்த சாதனை நிகழ்த்தப்படுமானால், இன்னும் சிறப்புதான். சாதனிகள் நிகழ்த்துவது சச்சினுக்கு ஒன்றும் புதிதல்ல. பொறுத்திருந்து பார்ப்போம்.
==========================================
கார்ட்டூன் கார்னர்
தினமலர் நாளிதழில் வெளியான கார்டூன்.
========================================
தேன் கிண்ணம்
ஏணிப்படிகள் படத்திற்காக கே வீ மகாதேவன் அவர்கள் இசையில் பாலசுப்ரமணியம் பாடிய பாடல்.
எல்லா துறையிலும் தங்கள் வாரிசுகளை புகுத்தி மிளிரவைக்க வேண்டும் என்பது அரசியல் மற்றும் சினிமா துறையில் வாடிக்கை அதற்கு விதிவிலக்கானவர் மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் மட்டுமே. இதற்க்கு முன் எழுதிய பதிவுகளின் வரவேற்ப்பு காரணமாக இந்த தொடர் பதிவை விடாமல் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
"தகடு தகடு" என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லி, கையை பிசைந்து முலையை மட்டும் காட்டி வந்த தமிழ் சினிமா வில்லன்களில் இருந்து மாறுபாட்டை காட்டியவர் "புரட்சி தமிழன்" சத்யராஜ். ஆரம்ப கால சினிமாவில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும் "காக்கி சட்டை" படத்திற்கு இவரின் மீது எல்லோர் பார்வையும் பட ஆரம்பித்தது. "நூறாவது நாள்" படத்தின் மூலம் கொடூரமான வில்லனாக பரிமளித்தார். நூறாவது நாள், எனக்குள் ஒருவன், மூன்று முகம், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களின் மூலமும் சிறந்த வில்லனாக ஜொலித்தார்.
இயக்குனர் சந்தன பாரதியின் "கடமை கண்ணியம் கட்டுப்பாடு படத்தில் அறிமுகமானார். இவர் கதாநாயகனாக நடித்த "கடலோரக்கவிதைகள்" படத்தில் சிறந்த கதாப்பாத்திரத்தில் இவரை நடிக்க வைத்து இவரை நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.
இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் இயக்கத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிதும் பேசப்பட்டன. கவுண்ட மணியுடன் இவர் சேர்ந்து நடித்த படங்களில் இருவரின் லொள்ளுகளுக்கு அளவே இருக்காது. தமிழ் சினிமா உலகில் மினிமம் கியாரண்டி நாயகனாக வலம் வந்தார் சத்யராஜ். எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் வருடத்திற்கு நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்து வந்தார். இன்னொரு பெருமையும் இவருக்கு உண்டு, தமிழ் சினிமாவை தவிர வேறு எந்த மொழிகளிலும் இவர் இதுவரை தலை காட்டியதே இல்லை.
மக்கள் திலகம் எம்ஜிஆரின் அதிதீவிர ரசிகர். ஒரு முறை எம்ஜீஆரை இவர் சந்தித்தபோது, உனக்கு என்ன வேண்டும் என கேள் என இவரை கேட்டாராம் எம்ஜீஆர். இவருக்கு என்ன கேட்பது என தெரியாமல் நீங்கள் உடற்பயிற்சி சேயும் கருவிகள் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் என கேட்க. உடனே எம்ஜீஆர் தான் உடற்பயிற்சி செய்யும் கர்லாகட்டையை இவருக்கு பரிசாக கொடுத்தாராம். இதை சத்யராஜே ஒரு தொலைக்காட்சி நேர்காணலின்போது சொன்ன ஞாபகம்.
காலத்துக்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக்கொள்வதிலும் சத்யராஜ் முன்னோடியாகவே இருக்கிறார். ஒரு நிலைக்கு பிறகு அப்பா பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்றும் இவர் சிறந்த குணசித்திர நடிகராக வலம் வருகிறார். இமேஜ் என்ற வட்டத்தில் இவர் எப்போதும் சிக்கிகொண்டதில்லை. அதற்க்கு உதாரணம் கதாநாயகனாக நடித்த பின்பு பாரதிராஜா படத்தில் ராஜாவுக்கு அப்பாவாக "வேதம் புதிது " படத்தில் நடித்து மாற்றத்தை உண்டாக்கியவர். தங்கர்பச்சானின் "ஒன்பது ருபாய் நோட்டு படம் இவர் நடிப்பில் ஒரு சிகரம். அது மட்டுமின்றி இவரின் கனவு படமான "பெரியார்" படத்தில் தன் சொந்த குரலில் பேசி நடித்து அதையும் நிறைவேற்றிக்கொண்டார் நம்ம புரட்சித்தமிழன்.
இன்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத பாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடமம் பெற்று இருக்கும் நம்ம சத்யராஜின் ஒரே மகன் சிபிராஜ் தமிழ் சினிமாவில் சோபிக்க முடியாமல் போனது வருத்தமே.
முதன் முதலாக 2002 -ம் வருடம் "ஸ்டுடென்ட் நம்பர் 1" படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் சொல்லிகொள்ளும்படி இல்லை என்றாலும், இவரை நிலை நிறுத்த சத்யராஜ் அவர்களுடன் இணைந்து "ஜோர்" "வெற்றிவேல் சக்திவேல்" கோவை பிரதர்ஸ்" போன்ற படங்களில் நடித்தார்.
பின்பு "பிரபு சாலமன்" அவர்களின் இயக்கத்தில் "லீ " என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை சத்யராஜே தன் மகனுக்காக தயாரித்தார். மற்ற படங்களை காட்டிலும் இந்த படம் ஓரளவிற்கு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது. ஆனாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று நிரந்தரமாக இவரால் ஒரு இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
கடைசியாக தன் தந்தையின் பாணியை பின்பற்றி வில்லனாக நாணயம் படத்தில் நடித்தார். இன்றுவரை அதுவே அவரின் கடைசி படமாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இன்னும் வயசிருக்கு. நாற்பது வயதில் பெரிய நட்சத்திரமாக மின்னிகிற விக்ரம் போல இவருக்கும் வாய்ப்பு இருக்கிறது.
இதன் தொடர் பதிவுகளை படிக்க, கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தவும்.