Thursday, June 16, 2011

துதி பாடுவதில் சிறந்தவர் வாலியா?? வைரமுத்துவா??

சென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்டு விழாக்கள் நடத்தி களிப்புற்றனர். இந்த பாராட்டு விழாக்களில் முக்கிய துதி பாடிகள் கவிஞர் வாலியும், கவிஞர் வைரமுத்துவும். ஊழல் செய்து சிறைக்கு சென்ற கலைஞரின் மகள் கனிமொழி மற்றும் ராஜாவை செய்த சாதனைகளை பாராட்டி "ஊழல் தலைவனுக்கு சீராட்டு விழா" எடுத்து அதில் இந்த கவிஞர்கள் கவி பாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

கவிஞர் வாலி:


புறா, மீன் சாப்பிடும் பிராமின் என்று என்னை புகழ்ந்த எம்பெருமானே !!

திருக்குவளை தந்த புதல்வா!!
தமிழ்நாட்டில் ஊழலுக்கெல்லாம் நீ முதல்வா!!

 எம்பெருமானே!! நீ தொட்டால் தகரமும் தங்கமாகும் !!
தவளையும் சிங்கமாகும்..!!

பூமாரி!! தேன் மாரி!! நீ வாய் திறந்தால் பொழியும் வசை மாரி!!

எந்திரனுக்கு பிறகு ரஜினி படம் எடுத்தால் அது புதுசு!!
மோசடி, சுரண்டல் இதெல்லாம் உனக்கு அரத பழசு!!

நமீதா கையளவு துணியை உடம்பில் போட்டு நடித்தால் அது கச்சை!!
கதை எழுதுவதில் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் எல்லாம் வாங்கவேண்டும் உன்னிடம் பிச்சை!!!

 இரண்டு இசைக்கருவிகளை ஒன்றாக வாசித்து கேட்டால் அது பியுசன்!!
ஊழல் செய்து மாட்டமலிருக்க அரசியல் வாதிகள் உன்னிடம் படிக்கவேண்டும் டியூஷன்!!!

சோனியா மீது உனக்கு அடிக்கடி வருகிறது உனக்கு வெறுப்பு!!
கனியை  விட சொல்லி டெல்லி வரை போயும் வேகவில்லை உன் பருப்பு !!

ஒரு ரூபாய்க்கு அரிசி தந்தாய் !! தொண்ணூறு ரூபாய்க்கு பருப்பு தந்தாய்!!
இதனால் மக்களுக்கு வெறுப்பை தவிர வேறென்ன தந்தாய் !!

சொல்வாய் ஊழலுக்கு நான் நெருப்பு!!
இதை கேட்டால் தயாளுஅம்மாளுக்கே வரும் வெறுப்பு!!!

(ரொம்பத்தான் ஓவரா போய்டமோ!! போன என்ன!!!)

வைரமுத்து: 

கவிஞர் வாலி அவர்களே!!
உங்கள் துதிக்கும் என் துதிக்கும் வித்தியாசம் நிறைய இருக்கிறது.

ஏன் என்றால் நீங்கள் ஸ்ரீரங்கத்து சிவப்பு!!
நான் வடுகப்பட்டி கருப்பு !!!

திராவிடமும் ஆரியமும் உன் பொழுதுபோக்கு!! மாநில சுயாட்சிஎன்று எப்போதுமே உனக்கு விளையாட்டு !!!

வரலாற்றில் அறிந்த நீரோ மன்னன் ரோம் பற்றி எரிந்தபோது பிடில் வாசிந்தானாம்..!!

நீ வாழும் நீரோ மன்னன்!! ஈழம் பற்றி எரிந்தபோது நீ மானாட மயிலாட பார்த்து களிபுற்றாய். ..!!

கை கட்டி வேடிக்கையும் பார்ப்பாய்!! போனபின் இரங்கல்பாவும் பாடுவாய் !!

முட்டை போண்டவிலிருந்து போண்டவுக்கே தெரியாமல் முட்டையை திருடும் செப்படி வித்தைக்காரன் நீ !!


விஞ்ஞானத்தில் அவரவர் பேன், கிரைண்டர் கண்டுபிடிக்க ஊழலை கண்டுபிடித்த நியூட்டன் நீ !!(நியூட்டன் ஆத்மா மன்னிக்க)

ஏய் குமாரா!! உற்று பார் தமிழ் மட்டும் படித்து இன்று ஆசிய பணக்காரர் ஆனவரை!!  

(இந்த துதி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா !!)

அன்புடன் 
அசோக் குமார்

Wednesday, June 15, 2011

தமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அடி மட்டத்தில் இருந்து, மெல்ல மெல்ல தங்கள் திறமையை பயன்படுத்தி உயர்ந்தவர்கள் பலர். ஆனாலும், தங்கள் வாரிசுகளை இதே தொழிலில் களம் இறக்கி வெற்றி கண்டவர்கள் மிக சிலரே. தனகென்று திறமை இல்லாமல் எந்த துறையிலும் சாதிப்பது ரொம்பவே கஷ்டம். தமிழ் சினிமாவில் தோற்று போன வாரிசுகள் பற்றி கொஞ்சம் பார்க்கலாம்!! இதை ஒரு தொடர் பதிவாகவே எழுதலாம் என்று இருக்கிறேன்!!!

மனோஜ் - பாரதி ராஜா


 சென்னை  நகரத்தின் செட்டுகளில் மட்டும் இயங்கிக்கொண்டு இருந்த தமிழ் சினிமாவை குக்கிராமத்தின் சந்துக்குள்ளும் போய் நிஜமான கிராமத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்திய பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களயே சேரும். தமிழ் சினிமாவின் வரலாறு என்று பேச ஆரம்பித்தால் பாரதி ராஜா அவர்களை விலக்கி விட்டு பேச முடியாது.


தமிழ் சினிமாவில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அநேகம் பேர். இவர் மோதிர கையால் குட்டு பட்டு முன்னுக்கு வந்தவர்கள் இன்னமும் தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய ஜாம்பவானின் மகன் அதே துறையில் சோபிக்க முடியவில்லை என்பது பெரிய ஆச்சர்யம், ஆனாலும் உண்மை. சினிமாவில் கதாநாயகனாக ஆசைப்பட்ட மகனுக்காக பாரதிராஜாவே கட்டி எழுப்பிய கோட்டைதான் "தாஜ்மஹால்". மனோஜ் சவுத் ப்ளோரிடா பல்கலைகழகத்தில் தியேட்டர் ஆர்டிஸ்ட் கோர்ஸ் வேறு படித்துவிட்டு வந்தார்.

 கதைக்கு தேவை என்பதற்காக கமலுக்கே 16 வயதினிலே படத்தில் கோவணம் கட்டி அழகு பார்த்த பாரதிராஜா, தன் மகனுக்காக கொஞ்சம் இறங்கி வந்து, கிராமத்து இளைஞனுக்கு ரேபோக் ஷுவும், டெனிம் பாண்டும் போட்டு அழகு பார்த்தார்.
தன் மகனுக்காக இன்னொரு தியாகத்தையும் செய்தார் இயக்குனர் இமயம். தன் முதல் படம் முதல் தாஜ்மஹாலுக்கு முந்தைய படம் வரை தன்னுடைய உயிர் நண்பனான இளையராஜாவை, விட்டு A .R . ரஹ்மானை பிடித்தார். பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.   இருந்தாலும் படம் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. 
 பிறகு மனோஜை வைத்து இவரே இயக்கிய படம் "கடல் பூக்கள்". முரளியோடு சேர்ந்து இரண்டாவது கதாநாயகனாக நடித்த படம். பெரிய அளவில் இதுவும் பேசப்படவில்லை. 

இதன் பிறகு இயக்குனர்  சரண் இயக்கத்தில் மனோஜ் நடித்த படம் "அல்லி அர்ஜுனா", எதிர்பார்த்த அளவுக்கு இந்த படமும் பெரிய வெற்றி அடையவில்லை. "வருசமெல்லாம் வசந்தம்" படத்தில் குணாலுடன் சேர்ந்து நடித்த படம், சுமாராக வெற்றி அடைந்த படம் இது.

மீண்டும் பாரதிராஜா ஈர நிலம் படம் மூலம் மகனை நிலைநிறுத்த முயன்று தோற்றுபோனார். மனோஜ் நடித்த பல்லவன், சமுத்திரம், மகாநடிகன் படங்களின் மூலம் மறுபிரவேசம் செய்ய முயன்றும் தோற்றுபோனார்.
நந்தனா என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். இப்போது இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து வருகிறார்.  மீண்டும் நடிப்பு தொழிலை விட்டு அடுத்து கூடிய விரைவில் ஒரு படம் இயக்க போவதாக அறிவித்துள்ளார். இயக்குராகவாவது மிளிர்கிறாரா பொறுத்திருந்து பார்ப்போம்.

அன்புடன்
அசோக் குமார்  


Tuesday, June 14, 2011

நாய்களுக்கென ஒரு கிராமம்- படங்கள் இணைப்பு

இந்த செய்தி இங்கல்ல, பிரேசில் நாட்டில் "காசியஸ்" (caxias) நகரில் தான் இப்படி நாய்கள் மட்டுமே குடி இருக்க தனி கிராமமாக உருவாகியுள்ளனர். 


இந்த நகரில் உள்ள நாய்கள் எந்த சிரமமும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கபடாமல் பாதுகாக்கவே இப்படி ஒரு கிராமத்தையே இந்த நாய்களுக்காக ஏற்படுத்தி உள்ளனர்.

இந்த "நாய் கிராமத்தில் சிறு சிறு வீடுகளாக ஒரு நாய் தங்கும் அளவுக்கு கட்டியுள்ளனர். "அமா" (Ama) என்ற பிராணிகள் வதை தடுப்பு அமைப்பு இந்த கிராமத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது. 


இந்த நாய்களுக்கு நேரத்திற்கு உணவும், தண்ணீரும் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் சிறு வீடுகளில் 1600  நாய்கள் வரை தங்கவைக்கப்பட்டுள்ளன. நாய்கள் மட்டுமின்றி 200 பூனைகளும் இருகின்றன.

நம்ம ஊர்ல சொந்த வீடு வாங்க மனுஷன் அல்லாடுறான். இங்க நாய்களுக்கு வீடு பிரமாதம்!!!!

அன்புடன் 
அசோக் குமார்

Monday, June 13, 2011

காலத்தால் அழியாத பாடல்கள்- பகுதி 4

என்றும் கேட்க கேட்க திகட்டாத பாடல்களை தொகுத்து வருகிறேன் அந்த வரிசையில் இன்றும் சில, காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்


படம்: அவள் அப்படிதான் 
பாடல்: உறவுகள் தொடர்கதை....

K .J . யேசுதாசின் வசீகர குரலில் இந்த பாடல் ஒரு தாலாட்டை போல. இந்த பாடலை எந்த நேரத்தில் கேட்டாலும் உற்சாகம் கரைபுரளும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.


படம்: புவனா ஒரு கேள்விக்குறி 
பாடல்: விழியிலே மலர்ந்தது....

இளையராஜாவின் முத்துக்களில் ஒன்று. ரஜினி தன்னை நல்ல நடிகனாக காட்டிய படங்களில் இதுவும் ஒன்று. 


படம்: கவிக்குயில் 
பாடல்: சின்ன கண்ணன் ....

சாஸ்திரிய சங்கீதத்தின் மேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் கர்னாடக சங்கீத நெடியே இல்லாமல் பாடிய பாடல். 


படம்: அடிமை பெண் 
பாடல்: ஆயிரம் நிலவே வா...

SPB பாடிய முதல் பாடல் என்றும் இல்லை என்றும் பல சர்ச்சைகள் உண்டு. ஆயிரம் இருந்தாலும் அவருக்கு திரை பாடகராக பெரிய பெயரை பெற்று தந்த பாடல். 

படம்: காதலிக்க நேரமில்லை
பாடல்:நாளாம் நாளாம் திருநாளாம் ...

இயக்குனர் ஸ்ரீதர் படங்களில் பாடல்களுக்கு தனி முத்திரை உண்டு. சுசீலாவும் PB ஸ்ரீநிவாசும் இணைந்து பாடிய பாடல். 


அன்புடன் 
அசோக் குமார்

Sunday, June 12, 2011

உலகத்தின் தொடர்பே இல்லாமல் வாழும் அமேசான் பழங்குடியினர்


பிரேசில் அரசு கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒரு தகவலை வெளியிட்டது, அது எல்லோருக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை உண்டாக்கியது. இருக்காத பின்னே! வெளி உலகத்தின் தொடர்பே முற்றிலும் அற்று பொய் ஒரு கூட்டம் தனியே அமேசான் காடு பகுதியில், பேரு நாட்டின் எல்லை ஓரத்தில் வசித்து வருவதை கண்டறிந்து அதிகார பூர்வமாய் செய்தி வெளியிட்டு உள்ளனர். 


விமானம் மூலம் எடுத்த புகை படங்களின்ஆதாரமாக வைத்துகொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளது பிரேசில் அரசாங்கம்.


இவர்கள் தங்கள் குடிலை தாங்களே அமைத்துக்கொண்டு வாழும் அளவுக்கு நாகரீகம்  அடைந்துள்ளனர். விமானத்தை பார்த்து ஏதோ தங்களை தாக்க வருவதாக எண்ணிக்கொண்டு வில் கம்பைகொண்டு எரிவதை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.


பல ஆச்சர்யமூட்டும் தகவலும் உண்டு. புகைப்படங்களை பார்க்கும்போது அவர்கள் ஆடைகளை உடுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதனால் அவர்களுக்கு பருத்தி ஆடைகளை நெய்ந்து அணியும் அளவுக்கு நாகரிகம் கொண்டவர்கள் என்கிறார் ஆராய்ச்சியாளர். 



பி பி சி தன் குழுவோடு போய் விமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன். இதன் ஆராய்ச்சியாளர் "டேன் ஜேம்ஸ், பெரு நாட்டை சேர்ந்தவர், மேலும் அமேசான் காட்டில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் ஆகியவற்றை பதிவு செய்து வருகிறார்.


ஆனா ஒன்னு மக்கா!! இவங்கள பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கு. பின்ன இருக்காத, கரன்ட் பில், டெலிபோன் பில், வாட்டர் பில், காஸ் பில், பெட்ரோல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருள்கள் விலைவாசி ஏற்றம் அப்படின்னு எந்த பிரச்சினையும் இல்ல. பிரேசில் அரசுக்கு ஒரே வேண்டுகோள் அவங்களையாவது நிம்மதியா வாழ விடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமா போகட்டும்!!

மேலும்  விவரங்களை தெரிந்துகொள்ள www . amazon -indians .org என்ற இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம்.

Saturday, June 11, 2011

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பாலு மகேந்திராவின் சீடர்கள்

பாலு மகேந்திரா, மூன்றாம் பிறை தந்த அற்புத படைப்பாளி, சினிமாவை உயிராய் நேசிக்கும் ஒரு மாபெரும் கலைஞன். ஒவ்வொரு படைப்பையும் ஒரு குழந்தை போல நினைத்து படைக்கும் உன்னத கலைஞன்.


பாலு மகேந்திரா, தன் சீடர்களை பயிற்றுவிக்கும் விதமே தனி. இவரிடம் உதவி இயக்குனராக சேரவேண்டும் எனில் முதலில் பாட்டி வடை சுட்ட கதையை உங்கள் பாணியில் அவருக்கு பிடித்தார் போல் திரைக்கதை அமைத்து உங்களை நிருபித்து காட்ட வேண்டுமாம்.

உதவி இயக்குனராக சேர்ந்த பிறகு உங்களை கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவின் சின்ன நுணுக்கங்களை எல்லாம் கற்றுவித்து அத்துறையில் தேர்ந்தவராக மாற்றுவது அவர் வேலை. தினமும் ஒரு சிறு கதையை உங்களிடம் கொடுத்து, அதை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றி எழதி வர செய்து பின் அதில் உள்ள சிறு குறைகளையும், சுட்டிக்காட்டி திருத்துவாராம்.


இப்படி சினிமாவை உயிர் மூச்சாக நேசிக்கும் ஒரு கலைஞனின் சீடர்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக மாறி வருவது, தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம். எதார்த்தமான சினிமாவை நோக்கி தமிழ் சினிமா மெல்ல நகர்வதற்கு காரணம் பாலு மகேந்திரா அவர்களின் சீடர்கள்தான் என்பது அப்பட்டமான உண்மை.

"இயக்குனர் பாலா தொடங்கி, இன்று சீனு ராமசாமி" வரையில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை குவித்து இந்தியாவையே தமிழ் சினிமாவை திரும்பி  பார்க்க வைத்துள்ளனர்.


முதல் படமான "சேதுவிலேயே" தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறிப்போனார் பாலா. இந்த படம் வெளிவரும் முன்பு வரை தமிழ் சினிமாவில் கண்டுக்கொள்ளப்படாத நடிகராகவே இருந்த விக்ரம, சேது படத்திற்கு பிறகு நட்சத்திர அந்தஸ்தை அடைந்தது குறிப்பிடத்தக்கது. நந்தா படத்தில் நடித்த பிறகுதான் சூர்யா என்றொரு நல்ல  "கதாநாயகன்" கிடைத்தார்.  இதன் பின் பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு தேசிய விருதையும் வாங்கி கொடுத்தார். நான் கடவுள் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சாதாரண கதாநாயகனாகத்தான் இருந்தார். இந்த படத்திற்கு பிறகு பெரிதும் கவனிக்கபடுகிற கதாநயாகனாக மாறிப்போனார்.

2009  வருடம் நான் கடவுள் படத்திற்காக, 12  வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அகத்தியன் வரிசையில் பாலா சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். ஒரு கதா பத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும், அதன் நடை உடை பாவனை அனைத்தையும் படம் எடுக்க கிளம்பும் முன் முழுவதும் தீர்மானித்து விடுவது பாலு மகேந்திராவின் வழக்கம். அதே முறையைத்தான் பாலாவும் பின்பற்றுகிறார். "மணிரத்தினம் முதல் ஷங்கர்" வரை அனைவருக்கும் பிடித்த இயக்குனர் வரிசையில் முதலில் இருப்பவர் பாலா மட்டுமே.

சினிமாவுக்கு எழுத்தாளர்களின் பங்கும் முக்கியம் என்று எடுத்துகொண்டதால் நான் கடவுள் படத்திற்கு "ஜெயமோகனையும்", தற்போது வெளிவர இருக்கும் "அவன் இவன்" படத்திற்கு S.ராமகிருஷ்ணனையும் வசனம் எழுத வைத்துள்ளார் பாலா.


"கற்றது தமிழ்" ராம் பாலுமகேந்திராவின் பட்டறையில் இருந்து வந்த இன்னொரு இயக்குனர். முதல் படத்திலே தமிழ் சினிமாவின் அதிகம் பேசப்பட்ட இயக்குனர் . இதுதான் ராமின் முதல் படம் என்று அறியாதவர்களிடம் சொன்னால் நம்ப மாட்டார்கள்.

 தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இன்னொரு பொக்கிஷம் இயக்குனர் ராம். இப்போது தங்க மீன்கள் என்று, எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கும்  படத்தை இயக்கிக்கொண்டு உள்ளார்.

தமிழை மட்டுமே பாடமாக எடுத்து படித்தவன்  நிலையை எதார்த்தமாக சொல்லி வியக்க வைத்த மனிதர். இதை விட எதார்த்தமாக ஒரு படம் எடுக்க முடியுமா என்பது கொஞ்சம் சந்தேகமே.  இந்த படத்தின் கதாநாயகன் ஜீவா தன் வாழ்வின் மறக்க முடியாத சிறந்த படம் என சொன்ன படம்.



புதுமுகமாக அறிமுகமான அஞ்சலி, சிறந்த புதுமுக நடிகைக்கான  பல விருதுகளை வாங்கி தந்த படம். சிறந்த கதை மற்றும் எழுத்துக்கான விருதையும் ராமுக்கு வாங்கி தந்த படம்.




பாலு மகேந்திரா ஒரு உரையாடலில் குறிப்பிடும் போது, இதுவரையில் நான் எந்த இயக்குனரிடமும் போய் நான் உங்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டதில்லை, ஆனால் ராமின் ஒரு படத்திற்காவது நான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார் என்றால் ராமின் திறமை புரியும்.

ஒரு மோட்டார் சைக்கிளை வைத்து திரைக்கதை அமைத்து அதையும் சுவாரசியமும், வேகமும் குறையாமல் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியுமா என்றால் முடியும். அப்படி ஒரு படத்தை இயக்கி மலைக்க வைத்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

தனுஷ்க்கு தன் சினிமா வாழ்வில் ஒரு பெரிய வெற்றிப்படமாக அமைந்த படம்தான் "பொல்லாதவன்". நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் வாழ்கையில் மோட்டார் சைக்கிள் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் ஏற்படும் மாற்றங்களை எந்த அடைப்புக்குள்ளும் மாட்டி கொள்ளாமல் எதார்த்தமாக காட்டிய படம்.

அடிப்படையில் லயோலா கல்லூரியின் விஸ்காம் மாணவரான வெற்றிமாறன், இயக்குனர் பாலு மகேந்தராவுடன் இணைந்து சன் டிவியில் ஒளிபரப்பான  "பாலு மகேந்த்ராவின் கதை நேரம்" என்ற நிகழ்ச்சிக்காக 59  சிறுகதைகளை படித்து அதற்கு திரைக்கதை மாதிரியை அமைத்துக்கொடுத்தவர்தான் வெற்றிமாறன். பாலு மகேந்தராவுடன் அது ஒரு கனாக்காலம் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.
இரண்டாவது படமாக வெற்றிமாறன் இயக்கிய படம்தான் ஆடுகளம். சேவல் சண்டையும், அந்த தொழிலை கற்றுகொடுக்கும் ஆசானுக்கும், மாணவனுக்கும் இடையில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுத்த படம்தான் இது.


இந்த வருடம் , ஆடுகளம் ஆறு தேசிய விருதுகளை அள்ளி வந்துள்ளது. சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர் என முக்கியமான விருதுகளை பெற்று இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. பாலாவுக்கு பிறகு சிறந்த இயக்குனர் விருதை வாங்கும் மூன்றாவது தமிழனாக வெற்றிமாறன் வலம் வருகிறார்.

"தென்மேற்கு பருவக்காற்று " தலைப்பே சற்று கவித்துவமாக வைத்து குறைந்த பொருட்செலவில், ஒரே தேனியில் ஒரே பகுதியில் வாழும் இரு வேறுப்பட்ட மக்களின் வாழ்க்கையை படச்சுருளுக்குள் அடக்கிய இயக்குனர் "சீனு ராமசாமி ".

முதல் படம் கூடல் நகரில் சோபிக்க தவறினாலும் அடுத்த படமான தென் மேற்கு பருவக்காற்று படத்தில், புளுதிக்காட்டையும் அதில் பிழைப்பு நடத்தும் ஒரு பெண்ணையும் பற்றி இவ்வளவு சிறப்பாக பதிவு செய்தது சிறப்பு வாய்ந்தது.
பேர் சொல்லும் அளவுக்கு பெரிய நடிகர்களும் இல்லாமல், புதிய இசை அமைப்பாளரை வைத்து சிறப்பாக எடுத்த படம். பாடல்களை வைரமுத்து, மண்ணின் மணத்தோடு எழுதியது படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது.




இந்த வருடம் தேசிய விருது பட்டியலில் சிறந்த பிராந்திய மொழி படமாகவும், சரண்யா பொன்வண்ணன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். பாலு மகேந்த்ராவின் சீடரான இவரும் தேசிய விருதுகள் வாங்கியோர் பட்டியலில் இணைந்துள்ளார்.

இயக்குனர்கள் மட்டுமின்றி பாடலாசிரியர்களும் பாலு மகேந்த்ராவிடம் பாடம் பயின்று பெரிய அளவில் பரிமளித்து வருகின்றனர். அவர்களில் கவிஞர் அறிவுமதியும், நா. முத்துக்குமாரும் அடக்கம்.

பாலு மகேந்த்ராவின் சீடர்கள் ஒன்று அவர்கள் விருதுகளை வாங்கி குவிக்கின்றனர் அல்லது தாங்கள் உருவாக்கிய கதாபாத்திரம் மூலம் தங்கள் படத்தில் நடித்த நடிகர்களுக்கு விருதுகளை வாங்கி தருகின்றனர். பாலு மகேன்றாவின் சீடர்களால் தமிழ் சினிமா இன்னும் புதுப்புது சாதனைகளை படைக்கட்டும்!!!!

Friday, June 10, 2011

டாக்டர்களே ஏன் இப்படி ????


டாக்டர்: இந்த எக்ஸ்ரே உங்களோடது, நல்ல பாருங்க என்ன தெரியுது. 

நோயாளி: என் கிட்ட இருக்கிற காசை எல்லாம் புடுங்க போறிங்கனு நல்லா தெரியுது டாக்டர். 

டாக்டர்:??????????????
=====================================================

நர்ஸ்: டாக்டர்!! பத்தாம் நம்பர் பேஷன்ட் ரொம்ப சீரியஸா இருக்கார் 

டாக்டர்: ரெண்டு கடி ஜோக் சொல்லுங்க சிரிக்கிறாரா பார்ப்போம்

நர்ஸ்:?????????????
====================================================== 

டாக்டர் : உங்க சொத்து பத்திரமெல்லாம் எதுக்கு என்கிட்டே காட்டுறிங்க???

நோயாளி: இந்த சொத்து  மதிப்புக்குள்ள என் நோயை குணமாக்கிடுவிங்க தானே டாக்டர் !!!

டாக்டர் : ??????????????????????
=======================================================

நோயாளி: டாக்டர் ஒரு வாரமா வயத்து வலின்னு சொல்லி துடிச்சுக்கிட்டு இருக்கேன், நீங்க கடவுளுக்கு நன்றின்னு சொல்லிக்கிட்டு இருக்கிங்களே???

டாக்டர் : என் பொண்டாட்டி புதுசா ஒரு கலர் டிவி வேணும்னு கேட்டா, இப்போ நீங்க வந்து இருக்கீங்க அப்போ நான் கடவுளுக்குதானே நன்றி சொல்லணும் 

நோயாளி: ????????????
===============================================================
இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்த அல்ல, கொஞ்ச நேரம் சிரிக்கவே!!!

அன்புடன் 
அசோக் குமார்