ரோபோ ஷங்கர் எப்போதும் எனக்கு பிடித்த மிமிக்ரி கலைஞர். எப்போதும் இவர் நிகளிசிகளை பார்க்கும்போது மனசு லேசாகிவிடும் . குறிப்பாக இவர் ஆடும் கேப்டன் நடனத்திற்கு நான் அடிமை. நீங்களே பாருங்களேன்.
===============================================
=================================================
அவருடைய நிகழ்ச்சிகளில் இது பெரும் வரவேற்ப்பை பெற்ற ஒன்று. கண்களில் கண்ணீரை வரவழிக்க கூடிய ஒரு சிறப்பும் உண்டு.
கல்யாண கூட்டத்தில் மணப்பெண்ணின் தோழிகளை ரசிப்பதற்காகவே ஒரு இளைஞர் பட்டாளம் இருக்கும்# ஜென்ட்ஸ் சைக்காலஜி
***********************************************
ஒரு மருத்துவமனை மற்றும் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள் அவ்வளவுதான் இதை மட்டும் வைத்துகொண்டு ஒரு திரைக்காவியத்தை உருவாக்க முடியுமா ??முடியும் என காட்டியவர்தான் ஸ்ரீதர் அவர்கள். "தேன் நிலவு" படத்தின் வெற்றிக்கு பின் ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து கலக்கிய படம்தான் "நெஞ்சில் ஒரு ஆலயம். இந்த படத்தில் ஒரு சின்ன முக்கோண காதலை மயமாக கொண்டு இவரகளுக்குள் நடக்கும் சுவையான உரையாடலை சின்ன சின்ன காட்சிகள் மூலம் காட்சி படுத்தி அமர்க்களபடுத்தி இருப்பார் ஸ்ரீதர்.
மொத்தம் பதினெட்டு நாட்களில் மொத்த படத்தின் காட்சிகளை எடுத்து முடித்துவிட்டார் ஸ்ரீதர். இந்த படத்தில் "முத்துராமன்" (நடிகர் கார்த்திக்கின் தந்தை) மற்றும் "தேவிகா" (நடிகை கனகாவின் அம்மா ) என்று இந்த படத்திற்கு பின்னால் தமிழ் திரை உலகில் பிரபலமாக வலம் வந்த இந்த இருவரையும் இந்த படத்தில் அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீதர்.
இந்த படத்தின் கதை ஸ்ரீதர் அவர்களின் பட பார்மூலவான முக்கோண காதல் கதைதான் இந்த படத்திலும் படமாக்கி இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முத்துராமனை அவரது மனைவியான தேவிகா, புற்று நோயில் சிறந்து மருத்துவம் பார்க்கும் கல்யாண் குமாரின் மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார். பிறகுதான் தெரியவருகிறது, கல்யாண்குமாரும் தேவிகாவும் காதலித்து பிரிந்தவர்கள் என்று. முன்னாள் காதலியின் கணவரை காபற்றினாரா அல்லது முடிவுதான் என்ன என்பதை மிக சுவாரசியமான திரைக்கதை அமைப்புடன் வெளிவந்த படம் இது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பிரபலம், இசை அமைத்தவர் விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி அவர்கள். இதில் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஆச்சர்யமான செய்தி என்னவென்றால், இசைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பாராம் ஸ்ரீதர். அவரை இசை விசயத்தில் திருப்தி படுத்துவது சிரமம் என்று விஸ்வநாதன் அவர்கள் ஒரு சந்திப்பில் சொன்னது.
படத்தின் எல்லா பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் அவர்களே எழுதினர். "எங்கிருந்தாலும் வாழ்க" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்", " சொன்னது நீதானா", "முத்தான முத்தல்லவோ" , " என்ன நினைத்து என்னை" என மொத்தம் ஐந்து பாடல்கள்.
அந்த காலத்தில் ஒரு இயக்குனரை கல்லூரி பெண்கள் காதலித்தார்கள் என்றால் அது காதல் பட மன்னன் ஸ்ரீதர் அவர்களை மட்டுமே. இன்னும் சுவாரசியமான சில தகவல்களுடன் அடுத்த பதிவில் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுடன் சந்திக்கிறேன் .
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன் .. பவளக்கொடியிலே முத்துக்கள் கோர்த்தால் புன்னகை என்றே பேராகும்.. கணஈ ஓவியம் உயிர் கொண்டு வந்தால் .... அப்பப்பா என்ன வரிகள் .. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையை உலவ விட்டு இருப்பார்கள் இசை அமைப்பாளர்கள். \
இளையராஜா அவர்களின் மனைவி ஜீவா இளையராஜா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
---------------------------------------------------------------------------------------------------
என்னடா ஒருத்தர் தன் குடும்பத்தையே வச்சு எல்லோரையும் சுரண்டறார்னு இந்த அம்மாவை உட்கார வச்சா, அதை மாத்தறேன் இதை மாத்தறேன் அப்படின்னு சொல்லி காமெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க. நான் ஒன்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு எதிரானவன் அல்ல. ஆனாலும் நன்றாக இயங்கிக்கொண்டு இருக்கும் ஒரு நூலகத்தை தேவை இல்லாமல் கை வைத்து தன் பெயரை கெடுத்துக்கொள்ள (கெடுத்துகிட்டு ஆச்சு ) போகிறார் என்றே தோன்றுகிறது.அதற்காக நல்ல இடமாக பார்த்து ஒரு கட்டிடம் கட்டிவிட்டு போங்களேன். கருணாநிதி கட்டிய அனைத்தையும் மாற்றலாம் என்று கிளம்பினால் அப்புறம் மக்கள் எங்கே நலப்பணி எங்கே. இது தமிழ்நாட்டு மக்களின் சாபக்கேடு போலும். பேசாமல் கவர்னர் ஆட்சியை தமிழ் நாட்டில் அமல்படுத்திவிடலாம்.
---------------------------------------------------------------------------------------------------
வெகு நாட்களுக்கு பிறகு உருப்படியான ஒரு வேலையை செய்திருக்கிறார்கள். ரங்கநாதன் தெருவில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சீல் வைத்து மூடி இருக்கிறார்கள். ஏற்கனவே தீ விபத்து ஏற்பட்டு சில உயிர்களை காவு கொடுத்தும் இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. திரும்பவும் இது போன்ற தவறுகள் ஏதும் நடக்காமல் பார்த்துகொள்வது அவசியம் .
-----------------------------------------------------------------------------------------------------
போதி தர்மரை பற்றி தாறுமாறாக பல செய்திகள் வந்து தமிழர்களே பிளவு பட்டு விடும் அளவுக்கு பலத்த விமர்சனங்கள் முன் வைக்கபடுகிறது. முருகதாஸ் இதை வெளிக்கொண்டு வந்தது ஒரு வியாபார நோக்கதிற்க்காகதான் என்றாலும் அதை சினிமாவோடு நிறுத்திகொண்டார். நாம் தான் ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கி விடுவோமே !! ஏதோ சுமுகமாக முடிந்தால் சரி.
----------------------------------------------------------------------------------------------
நம்ம ஆளுங்க எப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க (பேஸ் புக்கில் கண்டுஎடுத்தது ).
இளையராஜா அவர்களின் இசையில் வெளிவந்த "இன்று நீ நாளை நான்" படத்தின் இந்த பாடல் எப்போதும் கேட்க தூண்டும். S. ஜானகி அவர்கள் எவ்வளவோ பாடல்கள் பாடி இருந்தாலும் இந்த பாடல் அவர்கள் இசை பயணத்தில் இந்த பாடல் ஒரு வைரக்கல்.
இந்த கவிதை 10 வருடத்திற்கு முன் " ஆனந்த விகடன்" என்று நினைக்கிறேன் புத்தகத்தில் வந்தது. என் பழைய டைரியை புரட்டியபோது கிடைத்தது. ரொம்பவும் சுவாரசியமான கவிதை, எளிமையாகவும் ரொமபவே எதார்த்தமாகவும் எழுதப்பட்டது. காதலில் ரொம்ப காயப்பட்ட ஒரு ஆத்மாதான் இதை எழுதி இருக்க வேண்டும் என நினைக்கிறேன். எழுதியவர் பெயரை எழுதி வைக்க வில்லை (மன்னிக்கவும் மறந்துட்டேன்). என்னவோ, எழுதிய அந்த மனிதர் இப்போது எந்த நிலையில் இருப்பார் என தெரிந்து கொள்வதில் கொஞ்சம் ஆவலாகவும் இருக்கிறேன். இதோ அந்த கவிதை.
பேச வைத்தது யார் ??
பல அனுபவங்கள்
எதை சொல்லி
எதை விடுவது
புத்தாண்டு வந்தால்
புகைப்பது
குடிப்பது
கிடையாது என்று
செய்த சத்தியத்தையா ??
உன் கோப தினங்களில்
மறந்த சத்தியத்தையா ??
உன் ஆளுமையில்
துவண்டு
துங்கிய தினங்களையா??
போதுமடி
உன் உறவு என்று
திமிறி, திருப்பி
ஏங்கிய நாட்களையா ??
மறக்கின்ற சக்தி
அதிகமடி எனக்கு
உன் கணவனுடன்
நீ கைகோர்த்து
காரில் ஏறி திரும்பி
அற்ப புழுவாய்
பார்த்த அந்த நாட்கள் ...
காரில் இறங்கி
கர்சிப்புடன் 'ச்சே
ஒரே தூசி என்கிறபோது
நினைத்தேனடி
நீ பேசவில்லை
உன் கணவனிடம்
உள்ள பணம் உன்னை
பேச வைத்தது என்று !!!
உண்மையில் நான் ரொம்பவே ரசித்த கவிதை உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு இதை பதிவிடுகிறேன்.