Tuesday, March 15, 2011

வசந்தமாக வந்தாள்

காதலிப்பது பெண்கள் வேலை - அதை
       கண்டுபிடிப்பது ஆண்கள் வேலையாம்!!!
அதை கூட சரியாக செய்யவில்லை- நான்
       பொறுத்து பார்த்தபின் நீயே சொன்னாய் ஒருநாள்!!!
பட்டம்பூச்சியின் சிறகுகளை கடன் வாங்கி பறந்ததை- போல்
       அந்த நினைவுகள் நிற்கும் நூற்றாண்டுகள் தாண்டியும்!!!!
பல உன் வினாக்களுக்கு விடை தெரியாமல் விழித்தேன்- நான்
         குறுநகை புரிந்து ஏற்றுகொண்டாய் நீ!!!
ஒன்று சேர்வோமா என்ற ஐயம் - உனக்கு
          தேற்றுவதை தவிர வழி ஏதும் இல்லை எனக்கு!!!!
காலசக்கரம் சுழன்றது வேகமாய்  - ஒருநாள்
       என்னிடமிருந்து உன்னை பிரிக்கும் என்று தெரியாமலே மகிழ்ந்தேன்!
பிரிவு என்ற சொல்லை நான் அறிந்த நாள், நாம்- பிரிந்தநாள்
       அழி பேரலையில் அடித்து செல்லப்படும் ஓடம் போல்-ஆனேன்
அழக்கூட முயற்சிக்கவில்லை, ஆண் மகன்  அழக்கூடதாம்!!
         போகட்டும் என் குழந்தைக்காவது உன் பெயரிட்டு- உன்னை 
நினைக்கவேண்டும் வசந்தமாக நீ, என் வாழ்வில் வந்ததற்காக!!!!

அன்புடன்
அசோக் குமார்

(Thanks to google for the image)

Monday, March 14, 2011

எனது பயணங்கள்-டகோ ஏரி (Lake Tahoe, Nevada state, USA)

            பயணங்கள் எப்போதும் மனதுக்கு சுகம் அளிப்பவை. அதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க போவதும் இல்லை. புராண காலம் தொட்டு ராஜாக்கள் காலத்தில் கூட கடல் பயணம் செய்து பிற நாடுகள் மீது போர் தொடுத்து வென்றதாக சரித்திரங்கள் கூறுகின்றன. சோழ மன்னன் ராஜராஜ சோழன், சுமார் 1279-இல் படை எடுத்து வங்க தேசம்,  ஈழம்,  சுமத்ரா, கடாரம், மபல்லாம் முதலானவற்றை கடல் பயணம் செய்து கைப்பற்றியவை.  

  
நீல நிற கோடு அவர்களின் வியாபார கடல் வழி பாதை

      கொலம்பஸ் பயணத்தினால் தான் இந்த அமெரிக்கா தேசமே கண்டுபிடிக்க பட்டது வரலாறு.  அன்று முதல் இன்று வரை பயணங்கள் மாறவில்லை என்றாலும் பயண அனுபவங்கள் மாறிவிட்டன.  

             பிரயாணத்தின் போது சந்திக்கும் புது மனிதர்கள், புதிய காட்சிகள் அனைத்துமே மனதுக்கு இதம் தருபவை.  அதிலும் மனதிற்கினிய நண்பர்களுடன் பயணம் செய்வது வாழ்கையில் ஒரு வரம். நான் அமெரிக்கா வந்த புதிது இங்கே சூழ்நிலைகள் புதிது, மனிதர்கள், கலாச்சாரம், பழக்கவழக்கம் என எல்லாமே எனக்கு புதிது.  எனக்கு யாரையும் இங்கே தெரியாது அந்த நேரத்தில் எனக்கு கடவுளாக கொடுத்த வாய்ப்புதான் இந்த பயணம்!!!!!

என்னுடைய கல்லூரியில் எனக்கு சீனியர் என்னை இந்த டகோ ஏரிக்கு  (Lake Taheo, Nevada st. USA) அழைத்து சென்றார். வழி எங்கும் பனி படர்ந்த மலைகள், சில்லென்ற காற்று பச்சை பசேலென உயர்ந்த மரங்கள் என இயற்கை வஞ்சனை இல்லாமல் கொட்டி கிடந்தது.

        
 இந்த ஏரி கடல் மட்டத்தில் இருந்து 1650 அடி உயரமும், சுமார் 1600 அடி ஆழமும், 122,160,280 ஏக்கர் பரப்பளவும் கொண்ட நன்னீர் ஏரி. இதன் நிறம் எப்போதும் நீல நிறம் கொண்டது. 
இந்த ஏரிக்கு மூன்று சிறப்புக்கள் உண்டு. இதன் நீல நிறத்துக்கு காரணம், இது வானத்து நிறத்தை கண்ணாடி போல் பிரதிபலிப்பதால் தான் என்கிறார்கள்.

இந்த ஏரி எப்போதும் எந்த குளிர் நிலையிலும் உறைவதில்லை எனவும் சொல்லபடுகிறது. 
மேலும் 75அடி ஆழம் வரை கண்ணால் பார்க்க முடியும், ஏன் என்றால் அவ்வளவு சுத்தமான நீர். நம்ம ஊராக இருந்தால் சாக்கடையாக்கி இருப்பார்கள். 
இயற்கை வளங்களை எப்படி பேணி பாது காக்க  வேண்டும் என இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேணும். 
   

 
விடுமுறை நாட்களை பெரும்பாலான அமெரிக்கர்கள் இங்கே கழிக்க விரும்புவதில் ஆச்சர்யம் ஏதும் இல்லை. குளிக்க, படகு சவாரி செய்ய மற்றும் நீர் விளையாட்டுகள் மிகவும் பிரபலம். இங்கே மீன் உணவு நன்றாக இருக்கும்.

உண்மையில் இது ஒரு சுகமான பயணம்!!!!!!

 அன்புடன்
அசோக் குமார்


Sunday, March 13, 2011

நான் ரசித்த புகைப்படங்கள்


ஒரு வாரத்திற்கு முன்பு பெர்க்கிலியில் (Berkeley, Califirnia, USA) நல்ல மழை. மாலை நேரம் சிறிது மழை ஒய்ந்தது போல் இருந்தது. நான் தங்கி இருக்கும் வீட்டை சுற்றி பார்த்தபோது கண்ட சில அழகியவற்றை படம்பிடித்தேன். சில உங்களுக்காக...!!!!!!!







அன்புடன்
அசோக் குமார்

Thursday, February 17, 2011

இது என்ன மாயம்!!!

இது என்ன மாயம்!!!
ஒற்றை குளிர் காற்று
       மேகத்தை வருடி மழையை
தருவிப்பது போல்!!!!!!
       உன் ஒற்றை பார்வை
என் மனதை வருடி காதலை
வர வைத்து விட்டதே!!!

Sunday, February 13, 2011

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!!

இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Monday, February 7, 2011

பிச்சைக்காரன்

உலக வல்லரசாம் அமெரிக்காவில் பிச்சைக்காரன்!!!!

வேறு  என்ன சொல்ல !!!!!!!!!!!!1

Wednesday, January 5, 2011

நடிகர் கமலஹாசனுக்கு கவிஞர் அறிவுமதி கண்டனம்- நான் ஆமோதிக்கிறேன்

 நடிகர் கமலஹாசனுக்கு கவிஞர் அறிவுமதி கண்டனம் என்ற
 தலைப்பை பார்த்தவுடன் என்னவோ ஏதோ என்று பதறி படித்து பார்த்தேன். அறிவுமதி கூறியதில் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தேன். நானும் கமல் ரசிகன்தான். ஆனாலும் தன் மேதாவி தனத்தை பயன்படுத்துவதில் ஒரு வரைமுறை வேண்டும். கமல் என்கிற தனி மனிதனின் ஈழ தமிழர்  உணர்வுகள் இந்த படத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எனக்கு சூத்திரன், பார்பனன் என்பதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது, ஆனால் அது உண்மைதான் என்பது போல் உள்ளது உங்கள் ஈழ தமிழரின் பாத்திர படைப்பு. நடிகன் என்றாலும் சமூக பொறுப்பு வேண்டும் திரு. கமல் அவர்களே.

அறிவுமதி எழுதிய கவிதை உங்களுக்காக......
"மன்மதன் அம்பு படத்தில் நடிகர் கமல் ஈழத்தமிழர்களை சித்தரித்த விதம் குறித்தும், தமிழ் பற்றி எழுதியிருக்கும் வசனங்கள் குறித்தும் தமிழுணர்வாளர்கள் இடையே பெரும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர் அறிவுமதி கமலுக்கு ஒரு கண்டனக் கடிதம் எழுதியிருக்கிறார்".
கவிஞர் அறிவுமதி கூறியுள்ளதாவது:-
"என்னதான் நகைச்சுவை என்றாலும், ஈழத் தமிழனை, சினிமா பைத்தியமாகச் சித்தரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்" என்கிற விகடன் விமர்சனக் குழுவிற்கு நன்றிகளோடு
30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு
இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்டோமோ?
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!
அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்
இந்த
அம்பு
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.
கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.
இந்த மன்மத அம்புவின்
வாயிலாக
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.
"தமிழ் சாகுமாம்
தமிழ் தெருப் பொறுக்குமாம்".
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்து...
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று...
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..
பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போல...
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்
அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!
அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.
அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!
தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!
இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூட... நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!
ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்­ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!
இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!
ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!
பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்
"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்."
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!
தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை...
நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
"யாதும் ஊரே யாவரும்
கேளிர்" என்று
உலகையே பெருக்கியவர்கள்
நாங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..
உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்!
கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்
இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.
எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..
நகைச் சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!
ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!
இதில் வேறு வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!
அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.
இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து
"உயிரே போகுதே"
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே"
பாடுவோம்.
ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!
எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!
அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.
அதற்கு
வருவான்
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!"
இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.
நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!
நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வேண்டாமா?
அன்புடன்
அறிவுமதி.