Tuesday, December 14, 2010

நான் ரசித்த திரைப்படம்

நான் ரசித்த திரைப்படம்-பார்த்திபன் கனவு!!!!
Thanks to google images for the picture
 இயக்குனர் கரு. பழனியப்பன் அவர்களின் முதல் படம், ஆனால் பத்து படங்கள் எடுத்தது போன்ற ஒரு தேர்ந்த படத்தை எடுத்துள்ளார். தலைப்பே மிகவும் கவித்துவமான ஒன்று. அமரர் கல்கி அவர்கள் எழுதிய "பார்த்திபன் கனவு"  என்ற நாவலில் இருந்து எடுத்துள்ளார்கள் என நினைக்கிறேன்.
இயக்குனரின் பிந்தைய படங்களான சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் என தலைப்புகளில் என்னே  கவித்துவம்!!!!!!.

சரி கதைக்கு வருவோம்......... கதை ஒன்றும் புதிது அல்ல ஆயினும் அதை சுவாரசியமாக சொன்ன விதம் சபாஷ்....... போட வைக்கிறார் பழனியப்பன்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் ஹீரோ.... அப்பா, அம்மா மற்றும் தாத்தாவோடு இருக்கிறார். எந்த வேலையிலும் முழுதாக ஒரு மாதம் கூட இருக்கமாட்டார். அவருடன் திரைப்படத்துக்கே இலக்கணமான மூன்று நண்பர்கள். ஒரு கட்டத்தில் சினேகாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ..... அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் வேண்டா வெறுப்பாக பெண் பார்க்க போகிறார்.  அங்கே சினேகாவே மணப்பெண் கோலத்தில் காபீயுடன் வர நமக்கே ஆச்சரியம்...... ஸ்ரீகாந்துக்கு இருக்காதா......!
பிறகென்ன கல்யாணம் சுபம்......
இதுவரையில் சுவாரசியமே இல்லாமல் போய்கொண்டு இருந்த திரைக்கதையில் திடீர் மாற்றம்....... கல்யாணம் முடித்து வரும் வேளையில்... ரோட்டில் நடந்து வரும் சினேகாவை பார்த்தவுடன் ஸ்ரீகாந்த் தலையில் இடி.!!!!!
அதன் பிறகு தான் காதலித்த சினேகாவை தேடி கேரளா செல்கிறார்... அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் பரிதாபமாக சென்னை வருகிறார்........
வீட்டிற்கு வந்தால் ஆச்சர்யம் எதிர் பிளாட்டில் காதலி சினேகா குடிவர உள்ளுக்குள் சந்தோஷம்.......!!!!!!!!! ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல்!!!!!!!
ஒரு நாள் இந்த விஷயம் மனைவி சினேகாவுக்கு தெரிய வர வீட்டுக்குள் பூகம்பம்......!!!!!!!!! அப்புறமென்ன எல்லோருக்கும் மன நிறைவை ஏற்படுத்தும் கிளைமாக்ஸ்!!!!!!!!!
குடும்ப படத்தை கூட இப்படி சுவாரசியமான  திரை கதையோடு சொல்லி இருக்கிற இயக்குனர் கரு. பழனியப்பனுக்கு ஒரு சபாஷ்......
முதல் விஷயம் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகாவுக்கும் உள்ள வேதியியல் (அதாங்க chemistry) ரொம்ப நல்லா இருக்கு.
நடுத்தர வர்க்க குடும்பத்தை அழகாக காட்டியுள்ளார் இயக்குனர். காலையில் தோசை சுடும் அம்மா, குளித்து பேப்பர் படிக்கும் அப்பா, பழைய ரேடியோ பெட்டியை ரிப்பேர் பார்க்கும் தாத்தா, எட்டு மணி வரை தூங்கும் ஸ்ரீகாந்த் என நம் வீட்டில் நடப்பதை போல உணரலாம்.

ஸ்ரீகாந்துக்கு நடிக்க நல்ல வாய்ப்பு அதை மிக அழகாக பயன்படுத்தி கொண்டார். இந்த படத்திற்கு பிறகுதான் ஸ்ரீகாந்தின் மார்க்கெட் உயர்ந்தது என சொல்லலாம். மனைவிக்கு உண்மை தெரிந்த பிறகு இவர் காட்டும் உணர்சிகளும்,  கிளைமாக்ஸ் காட்சியில் இவரின்  நடிப்பும் பிரமாதம்.

சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.... அதன் புன்னகை இளவரசி சிநேகாவதாங்க சொல்றேன்... இரட்டை வேடம் ரெண்டுமே வித்தியாசமான கதாபாத்திரம் பின்னி எடுத்திருக்காங்க சினேகா. இந்த படத்துல அப்போ அப்போ சிரிச்சி புன்னகை இளவரசின்னு சொல்ல வச்சிருக்காங்க. மனைவியா வர சினேகா பாந்தமா நடிச்சிருக்காங்க. புருசனுக்கு அடங்கின மனைவியா , விட்டு கொடுத்து வாழணும்னு சொல்ற வசனங்கள் அருமை!!!!!! படம் பார்க்கின்ற நிறைய ஆண்கள் எல்லாம் நமக்கு இப்படி ஒரு பொண்டாட்டி கெடைக்க மாட்டங்களான்னு பொறாமைபட வச்சிருக்காங்க..... !!!!!!!  படத்தை பார்த்தால் புரியும்!!!!!!!!!!!
நகைச்சுவைக்கென விவேக்!!! இவர் அறிமுக காட்சியே அமர்க்களம்.... தேவதரிசினி மற்றும் விவேக் காட்சிகள் கலகல!!!!!!!! என்ன நடிகர் திலகத்தை கலாய்த்து இருக்கிறார்.... அதை தவிர்த்து இருக்கலாம்!!! டிராபிக் போலீசிடம் ஆங்கிலம் பேசி தப்பிக்கும் காட்சி பிரமாதம்......
பாடகர் தேவன் இந்த படத்தில் அறிமுகம் ஸ்ரீகாந்தின் நண்பராக வந்து போகிறார்!!!! போலீஸ் ஸ்டேஷன் காட்சியில் சட்டை இல்லாமல் பார்க்கும்போது  சிரிப்பை தவிர்க்க முடியாது.....
வசனங்கள் சில இடங்களை நெஞ்சை தொடுகின்றன... குறிப்பாக ஸ்ரீகாந்த் சொல்லும் "கலைஞ்சு இருந்ததம்மா வீடு இல்லைனா அது மியுசியம்" அப்புறம்

இசை அமைத்தவர்  வித்யாசாகர்!!! பாடல்கள் எல்லாமே கேட்கும்படி இருக்கு!!1 முக்கியம் மெலடி பாட்டு ரொம்ப நல்ல இருக்கு...  "ஆலங்குயில்" பாட்டு ரொம்ப அற்புதம் பாட்டை எழுதினது கபிலன்... பாட்டுலயே சின்ன சின்ன கவிதைகள்... புது முயற்சி தான்... எனக்கு ரெண்டு கவிதை புடிச்சு இருக்கு
வெட்கம்
இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்!!!!
காதல்
நம் நான்கு கண்ணில் காணுகின்ற ஒற்றை கனவு!!!
அந்த பாடல் இங்கே!!! கேட்டு மகிழுங்கள்
இந்த படத்தில் முக்கியமான விஷயம் என்னன்னா நீங்க குடும்பத்தோட பார்க்கலாம்.... பாக்யராஜ் ஒரு தாவணி கனவுகள்ல சில்லறை போடுவாரே அது மாதிரி சில்லறை எல்லாம் போட்டுட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்ல...
பின் குறிப்பு : விக்கிபீடியா தளத்தில் இந்த படத்தை பற்றி சில விஷயங்கள் சுவாரசியமா இருந்தது. படம் மூணு கோடி ரூபா பட்ஜெட்ல எடுத்து 25 கோடி அள்ளி இருக்காங்க....

1 comment:

  1. ஒரு அருமையான விமர்சனம் தந்தருக்கு மிக்க நன்றி .. இந்த படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் வாழ்த்துக்கள் ..முக்கியமாக ஸ்ரீகாந்த் & சினேகா நன்றாக நடித்து இருந்தனர் ...


    மேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய Filmics.com
    பதிவு செய்க....

    ReplyDelete