Tuesday, February 7, 2012

படித்ததும் பிடித்ததும்- 07/02/12

சட்ட சபையில் உட்கார்ந்து கொண்டு எதை பார்க்க கூடாதோ எங்கே பார்க்க கூடாதோ அதை பார்த்து கொண்டு இருந்ததால் இன்று நாடே அந்த மனிதர்கள் (மனிதர்கள் தானா???) மீது காரி உமிழாத குறையாக திட்ட வேண்டும் போல் இருக்கிறது.
********************************************
இந்திய கிரிக்கெட் அணியின் சொதப்பலான ஆட்டத்தை பார்த்து வெறுத்து போன சஹாரா நிறுவனம் தான் வழங்கி  வந்த  ஸ்பான்சரை பிடுங்கி ஹாக்கி அணியிடம் கொடுக்க முன் வந்துள்ளது பாராட்டப்படவேண்டிய விஷயம். காலம் கடந்தாவது நல்லது நடந்தால் சரிதான். இனியாவது இந்தியாவின் தேசிய விளையாட்டு புத்துயிர் பெறட்டும்.
*********************************************
டைம் (TIME) பத்திரிக்கை வெளியிட்டுள்ள நூறு சிறந்த உலக படங்களின் வரிசையில் சத்யஜித் ரே  இயக்கிய "The Apu Trilogy" என்ற படமும், தமிழில் மணிரத்னம் இயக்கி வெளிவந்த "நாயகன் படமும் இடம் பிடித்துள்ளது. அதன் இணைப்பு இங்கே .
*******************************************
யு டியூபில் இந்த காணொளியை எதேச்சையாக காணும்படி நேர்ந்தது. "தேவர் மகன்" படத்தில் இடம் பெற்ற "இஞ்சி இடுப்பழகி" பாடல் உருவான கதை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். கொஞ்சம் சுவாரசியமாக இருந்ததால் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

******************************************************
நேற்றுதான் நண்பன் படம் பார்த்தேன், ஏற்கனவே "3 idiots" படத்தை மூன்று நான்கு முறை பார்த்துவிட்டேன், இதில் புதிதாக ஷங்கர் என்ன செய்திருக்கிறார் என்று பார்க்கவே இந்த படத்தை பார்த்தேன். படத்தில் என்னை ரொம்பவும் கவர்ந்தது சத்யன் மட்டுமே. படத்தில் சத்யராஜ் கேரக்டரும் சத்யன் கேரக்டரும்முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் இருவருமே தங்கள் பத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தார்கள். கிளைமாக்ஸ் காட்சியில் அமீர் கான் போலவே முகபாவங்களை கொடுத்திருக்கிறார் விஜய் அட்டை காபி தான் என்றாலும் நல்லாவே இருந்தது.
*************************************************
spider man  படத்தின் புதிய படம் ஒன்றின் ட்ரைலர் வெளி வந்திருக்கிறது. படம் இந்த சம்மரில் வெளியிடப்படும் போல தெரிகிறது.


**********************************************
நான்  ரசித்த  புகைப்படம்

 ****************************************************
நான் ரசித்த பாடல் 
"இசைஞானி இளையராஜாவின்" இசை அறிவைப்பற்றி நான் சொல்லி யாருக்கும் தெரிய வேண்டியதில்லை.குறிப்பாக"ஹே ராம்" படத்தில் "இசையில் தொடங்குதம்மா" பாடல் என்னை எப்பவும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறது. எப்போது கேட்டாலும் ஏதோ புதிதாக கேட்பது போல் இருப்பதே இதன் சிறப்பு என்று நினைக்கிறேன். இந்த பாடலின் குரல் தேர்வும் அப்படியே, "அஜய் சக்ரபோர்த்தி" என்ற பெங்காலி பாடகர் தமிழை இவ்வளவு சிறப்பாக உச்சரித்திருக்கிறார்.

***********************************************
அன்புடன் 
அசோக் குமார்

2 comments:

  1. எனக்கென்னமோ சகாரா சும்மா மிரட்டி பாக்குதுன்னுதான் தோணுது...

    ReplyDelete
  2. பொறுத்திருந்து பார்போம் பாலா சார்

    ReplyDelete