சேவலின் விடியல் 
கூவலோடு  தொடங்குகிறது
 பூக்களின் விடியல்  
மலர்தலோடு தொடங்குகிறது
சாலைகளின் விடியல் வாகன 
இரைச்சலோடு  தொடங்குகிறது 
புது கணவன் மனைவியின் விடியல் 
முத்தத்தோடு தொடங்குகிறது
குடிகாரனின் விடியல் சாராயத்தின் 
நெடியோடு தொடங்குகிறது 
குழந்தையின்  விடியல்
அழுகையோடு தொடங்குகிறது
பார்வை அற்றவனின் விடியல் 
இருளோடு தொடங்குகிறது!!
ஏழையின் விடியல் என்றும் 
ஏக்கத்தோடு தொடங்குகிறது
யுத்தத்தோடு தொடங்குகிறது!! 
விடியல் மட்டும் 
எல்லோருக்கும் ஒன்றுதான் !!!
அன்புடன் 
அசோக் குமார் 

விடியல் குறித்த தங்கள் படைப்பு அருமை
ReplyDeleteதங்கள் விடியல் என்றும் இதுபோன்ற
அழகான கவிதையோடு பிறக்க வாழ்த்துக்கள்
அருமையான விடியல் ...வாழ்த்துக்கள் !
ReplyDeleteமுடிவுல இருக்கு நச்..!!!
ReplyDelete//விடியல் மட்டும்
எல்லோருக்கும் ஒன்றுதான் !!!//
இதற்கு முன்னர் இருப்பதற்கும் இதற்கும் கோர்வை மிஸ் ஆவது போல ஒரு ஃபீலிங்.. !!! மத்தபடி சொல்ல வந்தது அருமை..
விடியல் கவிதை அருமை..
ReplyDeleteஅருமையான வரிகள்
ReplyDeleteஅருமையான விடியல் கவிதை..வாழ்த்துக்கள்...
ReplyDelete// Ramani said...
ReplyDeleteவிடியல் குறித்த தங்கள் படைப்பு அருமை
தங்கள் விடியல் என்றும் இதுபோன்ற
அழகான கவிதையோடு பிறக்க வாழ்த்துக்கள் //
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
// koodal bala said...
ReplyDeleteஅருமையான விடியல் ...வாழ்த்துக்கள் ! //
நன்றி பாலா !!
தம்பி கூர்மதியன் said...
ReplyDeleteமுடிவுல இருக்கு நச்..!!!
//விடியல் மட்டும்
எல்லோருக்கும் ஒன்றுதான் !!!//
இதற்கு முன்னர் இருப்பதற்கும் இதற்கும் கோர்வை மிஸ் ஆவது போல ஒரு ஃபீலிங்.. !!! மத்தபடி சொல்ல வந்தது அருமை..//
கவிதை எழுதுவதில் பெரிய புலமை இல்லை . விடியல் ஒன்றுதான் ஆனால் தொடக்கம் தான் வித்தியாசப்படுகிறது என சொல்ல நினைத்தேன். திருத்திக்கொள்ள பார்க்கிறேன். பின்னூடத்திற்கு நன்றி.
விடியல் பற்றிய கவிதை அருமை
ReplyDelete