சமீபத்தில் வெளிவந்து உலகெங்கும் ஓடிக்கொண்டு இருக்கும் "பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்" படத்தில் ஜானி டேப்பிற்கு பிறகு எல்லோரையும் திரும்பி பார்க்க வாய்த்த பெண் செரீனா என்ற கதாபாத்திரத்தில் கடல்கன்னியாக  நடித்த "பெர்கேஷ் பிரிஸ்பே". படம் பார்க்கும்போதே இந்த பொண்ணு என்னை ரொம்பவே அட்டராக்ட்  பண்ணிடுச்சி. சரி யாரு என்னனு பார்த்தேன் அதை உங்களோடும் பகிர்ந்துகறேன். 
 அம்மணி பொறந்தது ஸ்பெயின் நாட்டின் பர்செலோனா நகரத்தில். இப்போ தங்கி இருக்கிறது பாரிஸ்.  இவர் ஸ்பெயின் மற்றும்  பிரெஞ்சு படங்களில் தலைகாட்ட ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே டிவி ஷோஸ்ல நடிச்சிருக்கு. பொண்ணு இதுவரைக்கும் நடிச்ச படங்களே மொத்தம் நாலு. "தி சீ வால்ன்னு" ஒரு இங்க்லீஷ் படம் இன்னும் ரெண்டு பிரெஞ்சு படம். 
 இதுமட்டும் இல்ல பேஷன்   ஷோஸ்  கூட  கலந்துகிட்டு தூள் பண்ணுது. "பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்" டைரக்டர் கூட இந்த பொண்ணை தி சீ வால் படம் பார்த்துதான் இந்த கேரக்டருக்கு புடிச்சதா சொல்றாரு. 
"பெர்கேஷ் பிரிஸ்பே" பேசின காணொளி கிடைச்சது நீங்களே பாருங்க எவ்ளோ அப்பிரானிய பேசுது பொண்ணு. 
பிரேட்ஸ் ஆப் கரிப்பியன்" படம் பார்த்த எல்லோருக்கும் இவங்களை புடிச்சிருக்கும்.
அன்புடன் 
அசோக் குமார் 





No comments:
Post a Comment