வீடு கட்டுவது எல்லோருடைய கனவு. அதிலும் நடுத்தர வர்கத்தினர் இதில் முந்தி. காரணம் வாடகை வீடுகளில் இவர்கள் படும் சிரமம். 1988- இல் இயக்குனர் பாலு மகேந்திரா எடுத்த படமான "வீடு" நடுத்தர வர்க்கம் படும் துன்பத்தை படம்பிடுத்து காட்டி இருந்தார். அதுமாதிரி இல்லாமல் இயற்கை கொடுத்த வரபிரசாதமான இந்த இடத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா\??
ஈரானின் வடமேற்கு மூலையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான கிராமம் தான் "கண்டோவன்". அது மட்டுமில்லாமல் உர்மியா என்ற ஏரியின் ஒரு மூலையில் இந்த சின்ன கிராமம் இருக்குது. அப்படி என்ன தான் இருக்கு இந்த ஊர்ல.
நம்மள மாதிரி செங்கல், சிமெண்ட் , மணல் ஏதும் இல்லாமல் மலையில் இருக்கிற பாறைகளை செதுக்கி வீடுகளாக மாற்றி இருகிறார்கள். இதில் ஆச்சர்யபடவைக்கும் விஷயம் என்னன்னா எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில் இருக்கும்.
இந்த வித்யாசமான தோற்றம் எப்படி வந்தது என ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்து கண்டுபிடித்தனர். இந்த பகுதியை ஒட்டி உள்ள மலையான "சஹாந்த்"-இல் இருந்து வெளியான எரிமலையின் சாம்பல்தான் இதற்கு காரணம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.
இந்த மலை "சஹாந்த்"பல சிறப்புக்கள் வாய்ந்தது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மலை பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகள் நிறைந்து இருக்கின்றன. இவற்றுக்கு பல நோய்களை குணமாக்கும் வல்லமை இருப்பதாக அறியபடுகிறது. இந்த மலையில் உள்ள பாறைகளை வயதை கணகெடுத்து பார்த்ததில் இவை 11,000-ம் வருட பலமையானவையாம். தொன்மையான பாரசீக தோட்டங்களை "பக்ஹ்ஸ்" என்று அழைப்பார்கள். அவை "பாரடைசா (pairadaeza)" என்றும் அழைக்கபடுகின்றன. இதுவே பின்னாளில் ஆங்கிலத்தில் "பரடிஸ் (paradise)" என்று அழைக்கப்பட்டது.
இந்த 700 வருட பழமையான கிராமம் உருவான வரலாறு கொஞ்சம் சுவாரசியமானது. மங்கோலிய படைகளிடம் இருந்து தப்பித்து மறைந்து கொள்ளவும், அகதிகளை குடியமர்த்தவும் இந்த இடம் பயன்பட்டதாக சொல்கின்றார்கள் இங்கு காலம் காலமாக வாழும் மக்கள். பிறகு இவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.
இந்த வீடுகளின் உட்புறம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு படுக்கை அறை, மற்றும் கால்நடைகளை கட்டிவைக்கும் பகுதி என பிரித்து வைத்துள்ளனர்.
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இடம் பிரபலமாவதை கண்டு நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்களுக்காக இங்கே தங்கும் விடுதி (Hotel) ஒன்றும் உள்ளது.
இன்னும் இதை பற்றி நெறைய தெரிஞ்சிக்கணும்னா இந்த சுட்டியை அழுத்துங்க
எனக்கும் இந்த ஊரை பார்க்கணும் போலத்தான் இருக்கு கொடுபணைனு ஒன்னு வேணுமே.
அன்புடன்
அசோக் குமார்