Saturday, November 12, 2011

விஜய் மல்லையாவும் நம் பிரதமரின் துடிப்பும்

விஜய் மல்லையாவின் "கிங் பிஷேர்" விமான நிறுவனத்தின் நட்டக்கணக்கை சரி கட்ட நமது மத்திய அரசு முன்வரவேண்டும் என இந்தியாவின் பிரபலமான "வியாபார காந்தம்" மல்லையா ட்விட்டரில் சில நாட்களாக கூவி வருகிறார். நாட்டில் எங்கும் ஊழல், விலைவாசி உயர்வு, தெலுங்கானா பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை, கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை என நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தும்  வாயே திறக்காத நமது "மாண்புமிகு" (மரியாதை ரொம்ப முக்கியம் அமைச்சரே) கிங் பிஷேர் நட்டத்திற்கு மட்டும் உடனடியாக எதாவது நாம் செய்ய வேண்டும் என்று விமானத்தில் பறந்துகொண்டே கூவுகிறார். ஒன்று நன்றாக புரிகிறது, இது மக்களுக்கான அரசு alla, கார்பரேட்   முதலாளிகளுக்கானது. நமக்கே தெரியாமல் நம் பையில் இருந்து பணத்தை உருவப்போகிறார்கள்! வாழ்க ஜனநாயகம் !!!
************************************************
சச்சின் நூறாவது சதத்தை அடிப்பாரா மாட்டாரா என்று தினமும் கூவுவதே இந்த ஊடகங்களுக்கு வாடிக்கையாகி விட்டது. தேவை இல்லாமல் அந்த மனிதருக்கும் கண்ணுக்கே தெரியாத அழுத்தத்தை ஏற்படுத்துவதில் இந்த ஊடகங்களுக்கு என்ன ஆசையோ. எல்லோரும் தான் அதை விரும்புகிறோம், ஆனாலும் கொஞ்சம் பொறுமை  தேவை. 
************************************************
ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விமர்சகரான "பீட்டர் ரோபுக்" தற்கொலை செய்துகொண்டார் என கேள்விப்பட்டு ரொம்பவும் வருத்தப்பட்டு போனேன். ஒரு வாலிபரை செக்ஸ் தொல்லைக்கு உட்படுத்தியதால், காவல்துறை விசாரணைக்கு பயந்தே அவர் தற்கொலை செய்துகொண்டார் அணவும், அவர் நல்ல மனிதர் என்று ஒரு சாரரும் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நடுநிலையாக விமர்சனம் செய்வதில் அவருக்கு  நிகர் அவரே!! அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் !!
********************************************** 
சில நாட்களுக்கு முன் பேஸ் புக்கில் பார்த்து ரசித்தது இந்த படத்தைதான். எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க !!!
************************************************** 
சில கீச்சுக்கள்
இளங்குமரன்
 பல கொடிய நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த போதிதர்மரால் கூட வழுக்கைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை
 
சிவகங்கை சிங்கம்
நீங்களே குளிக்கனும்ன்னு நெனச்சா அது உங்களுக்கு நன்மை, நாலு பேரு சேந்து உங்கள குளிக்கச்சொன்னா அது இந்த சமுதாயத்துக்கே நன்மை..!
 
இராஜராஜன்
மக்கார் பண்ற வண்டியையும் ரொம்ப தூரம் ஓட்டுபவன் தான் நல்ல டிரைவர் ..
 
 
நையாண்டி
பைக்கில் செல்லும் போது துப்பட்டாவை இழுத்து கட்டுங்கள்! இல்லையெனில் வாழ்க்கை சக்கரம் நின்றுவிடும்!
 
JanuShath
பிரிவு கனக்கிறது என்றால் பிரியாமல் இருந்திருக்கலாமே என்று மிகப்புத்திசாலித்தனமாய்க் கேள்விகேட்போர் பலர்...
 
  நையாண்டி
என்னடா கொடுமை இது! 108 போனக்கூட வழி விடமாட்டேன்கிறாங்க!
**************************************************
 "அவள் அப்படித்தான்" படத்தில் இந்த பாடல் என்னமோ எனக்கு ரொம்பவும் பிடித்து போய் விட்டது. இந்த "பன்னீர் புஷ்பங்களே" பாட்டைவிட  எல்லோருக்கும் "உறவுகள் தொடர்கதை " பாட்டுதான் எல்லோருக்கும் பிடிக்கும். கமல் தன் சொந்த குரலில் பாடிய பாடல், ஒரு வித மென் சோகம், இந்த பாடல் முழுவதும் இழையோடும் அது தான் இந்த பாடலின் சிறப்பம்சம்.

*******************************************************
அன்புடன் 
அசோக் குமார்

1 comment: